14 வயது மாணவனுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய ஆசிரியை கைது.. அதிர்ந்த போலீஸ்!
கடந்த மே மாதம் லூசியானாவை சேர்ந்த ஒரு ஆசிரியை மாணவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் மாணவர் ஒருவருடன் அவர் தவறான தொடர்பில் இருந்ததால் கைதும் செய்யப்பட்டார்.

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெலவேர் மாகாணம் வில்மிங்டன் பகுதியில் செயின்ட் மேரி மாக்டலன் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பெண் ஆசிரியையாக இருந்து வந்தவர் 24 வயதான அலனிஸ் பினியன். இவர் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார்.
பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் அலனிஸ் பினியன், ஸ்னாப் சாட் சமூகவலைத்தளம் மூலமாக பாடக்குறிப்புகளை அனுப்பியும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் 14 வயது மாணவன் ஒருவனுக்கு ஸ்னாப் சாட் வழியாக ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவன் இது குறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் ஆசிரியையின் மோசமான செயல் குறித்து நியூ காஸ்ட்லே கவுன்ட்ரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய ஆசிரியை அலனிஸ் பினியனை கைது செய்தனர்.
அவர் மீது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தையிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது உள்பட பல்வேறு பிரிகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அலனிஸ் பினியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
நீதிமன்றம் 46,000 டாலர் அபராதத் தொகையுடன் அலனிஸ் பினியனுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் அபராதத் தொகையை செலுத்தாததால் பெய்லர் பெண்கள் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டார். அலனிஸ் பினியன் கைது செய்யப்பட்டது குறித்து போலீசார் அவரது பள்ளிக்கு தகவல் தெரிவித்தனர்.
''அலனிஸ் பினியன் ஒப்பந்த முறையில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவரது ஒப்பந்தம் முடிந்து விட்டது. பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு அவரது பின்புலம் விசாரித்தோம்'' என்று செயின்ட் மேரி மாக்டலன் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களிடம் ஆசிரியைகள் அநாகரீகமாக நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. கடந்த மே மாதம் லூசியானாவை சேர்ந்த ஒரு ஆசிரியை மாணவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் மாணவர் ஒருவருடன் அவர் தவறான தொடர்பில் இருந்ததால் கைதும் செய்யப்பட்டார்.
இதே மே மாதம் ஆர்கன்சாஸ் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவர், 15 வயது மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் உள்ள பள்ளிகள் ஆசிரியையை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பு அவர் பின்புலம் குறித்து விசாரிக்க வேண்டும். பள்ளியில் பணியில் இருக்கும் ஆசிரியைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?






