மீண்டும்.. மீண்டுமா? சுனிதா வில்லியம்ஸ் எப்பதான் பூமிக்கு வருவாங்க.. நாசா கொடுத்த ஷாக்!

ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Mar 14, 2025 - 07:39
 0
மீண்டும்.. மீண்டுமா? சுனிதா வில்லியம்ஸ் எப்பதான் பூமிக்கு வருவாங்க.. நாசா கொடுத்த ஷாக்!
சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் நாசா சார்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பட்டனர். இவர்கள் போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

எட்டு நாட்கள் பயணமாக விண்வெளி நிலையத்திற்கு சென்றவர்கள் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒன்பது மாதங்களாக அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்பதற்காக நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

 தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 16-ஆம் தேதியை அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதாவது,  சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்து வருவதற்காக விண்ணில் செலுத்தப்பட இருந்த ஸ்பேஸ் எக்ஸ் (Space x) நிறுவனத்தின் ராக்கெட்டில் உள்ள முக்கிய பாகத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததால் ராக்கெட்டை விண்ணில் ஏவும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ராக்கெட்டானது இந்திய நேரப்படி நாளை (மார்ச் 15)  விண்ணில் ஏவப்படும் என்றும் வரும் 20-ஆம் தேதி விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow