அரிதான சூப்பர் மூன் நிகழ்வை பார்க்க தவறிவிட்டீர்களா? கவலையில்லை..இதை செய்யுங்கள்..

நேற்று (ஆகஸ்ட் 19) வானில் தோன்றிய சூப்பர் மூனை பார்க்க தவறியவர்கள், புதன்கிழமை(ஆகஸ்ட் 21) வரை அதை பார்க்கலாம் என தெரிவித்துள்ளது நாசா.

Aug 20, 2024 - 14:57
 0
அரிதான சூப்பர் மூன் நிகழ்வை பார்க்க தவறிவிட்டீர்களா? கவலையில்லை..இதை செய்யுங்கள்..
சீனாவில் தோன்றிய சூப்பர் மூன்

நேற்று (ஆகஸ்ட் 19) வானில் தோன்றிய சூப்பர் மூனை பார்க்க தவறியவர்கள், புதன்கிழமை(ஆகஸ்ட் 21) வரை அதை பார்க்கலாம் என தெரிவித்துள்ளது நாசா.

 நிலவை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. கவிதைக்கும் காதலுக்கும் சொந்தமான நிலவை, அறிவியல் கோணத்தில் பார்க்கும் மனிதர்கள்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானவர்கள் சூப்பர் மூன், ப்ளூ மூன் போன்ற நிலவின் முக்கிய மாற்றங்களை கண்காணிப்பது வழக்கம். 

நிலவு பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரமான பெரிஜி (perigee) என்றழைக்கப்படும் 3,64,000 கி.மீ தூரத்தில் பூமிக்கு மிக அருகில் வரும் போது சூப்பர் மூனாக காட்சியளிக்கும். இந்த சமயத்தில் நிலா எப்போதும் இருப்பதை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரியும்.

இது வழக்கமான பௌர்ணமி நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் பிரகாசமாகவும் இருக்குமாம். ஒரு மாதத்தில் பூமிக்கும் மிக அருகில் இரண்டு முறை நிலா வருகிறது என்றால், அதில் முதல் முறை தோன்றும் நிலவு சூப்பர் மூன் எனப்படுகிறது. இரண்டாவது முறை தோன்றும் நிலவு ப்ளூ மூன் எனப்படுகிறது. ஆனால், சூப்பர் மூனை விட இந்த ப்ளூ மூன் நிகழ்வு நடப்பது என்பது மிக மிக அரிது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல, ப்ளூ மூன் நிகழ்வின் போது நிலா உண்மையிலேயே நீல நிறத்தில் இருக்குமா என கேட்டால், இல்லை. நிலா நீல நிறத்தில் இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ இதுபோன்ற சமயங்களில் மிக அரிதாக நிலா நீல நிறத்தில் தோன்றலாம் என விஞ்ஞானிகளின் கூற்று இருக்கிறது. 1991ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் மவுண்ட் பினாடுபோ எரிமலை வெடித்ததால் நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் நிலா சில இடங்களில் தெரிந்ததாக கூறப்படுகிறது. 

2024ம் ஆண்டில் ஏராளமான சூப்பர் மூன் தென்பட்டது. அந்த வகையில் நேற்று வானில் தெரிந்தது இந்த சூப்பர் மூன். இந்த நிலவை நான் பார்க்கவில்லையே என நீங்கள் வருந்தத்தேவையில்லை. ஏனென்றால், இந்த நிலவு, வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 21) வரை வானில் தென்படும் என நாசா தெரிவித்துள்ளது. மேலும் இந்த சூப்பர் மூனை உலகத்தின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் காணலாம் என நாசா தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க: பெண்ணை சீண்டிய இளைஞர்.. பெண் செய்த செயல்..தட்டி தூக்கிய போலீஸ்

மேலும், இந்த சூப்பர் மூனை இன்றும் நாளை நீங்கள் பார்க்க தவறினால் கூட அதை எண்ணி வருந்தத்தேவையில்லை. இந்த சூப்பர் மூன் நிகழ்வு இந்த ஆண்டில் மேலும் மூன்று முறை  காட்சியளிக்கவுள்ளது. செப்டம்பர் 17, அக்டோபர் 17 மற்றும் நவம்பர் 15 ஆகிய தினங்களில் வானில் தோன்ற உள்ளது சூப்பர் மூன். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow