பெண்ணை சீண்டிய இளைஞர்.. பெண் செய்த செயல்..தட்டி தூக்கிய போலீஸ்
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சிலிமிஷம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சிலிமிஷம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் அதிகாலையில் பேப்பர் போடும் வேலை செய்பவர். இவர் வழக்கம் போல நேற்று காலை பேப்பர் போட சென்றிருக்கிறார். இந்த வேளையில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டதால், தூக்கத்தில் இருந்த மனைவி, கணவன் வந்திருப்பார் என எண்ணி கதவை திறந்திருந்திருக்கிறார். அப்படி கதவை திறந்த மனைவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கதைவை திறந்த உடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அப்பெண்ணை வீட்டிற்குள் தள்ளிவிட்டிருக்கிறார். அப்பெண்ணின் வாயை மூடி அவரிடம் அத்துமீற முயன்றுள்ளார்.
அப்பொழுது அப்பெண் அவரது கையை கடித்து விட்டு, அவரை கீழே தள்ளிவிட்டு சத்தம் போட்டு கூச்சலிட்டதாகவும்,இதனால் அந்த மர்ம நபர் கதவைத் திறந்துவிட்டு தப்பியோடியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு கணவர் வந்ததும் இதுகுறித்து அவரிடன் எடுத்துரைத்திருக்கிறார் அப்பெண். பிறகு கணவரோடு சேர்ந்து கோடம்பாக்கம் காவல்நிலையத்திற்கு சென்று இருவரும் புகாரளித்துள்ளனர்.
மேலும் படிக்க: டிரம்பை முந்தும் கமலா.. அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அதே பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் பார்த்திபன் தான் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இவரை கைது செய்ய முயன்ற போது அவர் தப்பியோடியதால், கீழே விழுந்ததில் வலது கை உடைந்து மாவு கட்டு போடப்பட்டுள்ளது. போலீசாரின் பிடியில் சிக்கிய இவர் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திபனை கைது செய்த போலீசார் அவரை விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தன்னுடைய மனைவியுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் பார்த்திபன் வெகு நாட்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால், அவ்வப்போது தனது இச்சையை தீர்த்து கொள்ள, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து, இந்த மாதிரியான சிலிமிஷங்களில் ஈடுபடுவதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்களுக்கு அச்சுறுத்தலான சூழல் பல இருக்கும் இந்த வேலையில், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
What's Your Reaction?