மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று மட்டும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 640 குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 15,120-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ. 1,20,960-க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே சரிவைச் சந்தித்து வரும் தங்கம் விலை, கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக பவுனுக்கு ரூ. 5,240 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 295-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2.95 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் உயருமா?
தற்போதைய சரிவு தற்காலிகமானது என்றும், சந்தை நிலவரம் சீரானதும் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகவும் சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், திருமணச் சீசன் நெருங்கும் வேளையில் இந்த விலை சரிவு நகை வாங்குவோருக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

LIVE 24 X 7