La Tomatina 2024 : 'லா டொமாடினா'.... ஸ்பெயினில் களைகட்டிய பாரம்பரியத் தக்காளி திருவிழா!

La Tomatina 2024 Spain Tomato Festival : ஸ்பெயினில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தக்காளி திருவிழாவிற்காக 1,50,000 கிலோ (150 டன்) தக்காளிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Aug 29, 2024 - 14:29
Aug 29, 2024 - 18:17
 0
La Tomatina 2024 : 'லா டொமாடினா'.... ஸ்பெயினில் களைகட்டிய பாரம்பரியத் தக்காளி திருவிழா!
ஸ்பெயினில் களைகட்டிய பாரம்பரியத் தக்காளி திருவிழா

La Tomatina 2024 Spain Tomato Festival : ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ஆண்டுதோறும் ‘லா டொமாடினா’ எனப்படும் தக்காளி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்நாட்டு மக்களின் பாரம்பரியத் திருவிழாவான இது, பல தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஸ்பெயினின் கிழக்கே, வாலன்சியா நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் புனோல் நகரில் இந்த பாரம்பரிய திருவிழா நேற்று (ஆகஸ்ட் 28) கோலாகலமாக நடைபெற்றது.

உள்ளூர் மட்டுமின்றி கென்யா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் இந்த திருவிழாவில் பங்கேற்க திரண்டு வந்திருந்தனர். அதன்படி வெள்ளை நிற ஆடையில் சுமார் 22,000 பேர் இத்திருவிழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவுக்காக நன்றாக விளைந்த, சிவப்பு நிறத்திலான 1,50,000 கிலோ (150 டன்) கணக்கிலான தக்காளிகள் 7 லாரிகளில் கொண்டு வந்து தயாராக வைக்கப்பட்டு இருந்தன. சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த ஆதரவைப் பெற்ற இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்ட தக்காளிகளால் தெரு முழுவதும் தக்காளிக் கூழினால் சிவந்து காணப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஒருவருக்கு தலா 16.70 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின்படி ரூ. 1,400 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. 

மேலும் படிக்க: தங்கலான் வெற்றி.... விருந்து பரிமாறி மகிழ்ந்த நடிகர் விக்ரம்!

பல மணிநேரம் இப்படி நட்பு ரீதியிலான இந்த சண்டை நீடித்தது. இந்த திருவிழாவுக்கு வந்திருந்த சுற்றுலாவாசிகள் மொபைல் போனில் செல்பி எடுத்தபடியும், தக்காளிகளை மற்றவர்கள் மீது வீசியும் மகிழ்ந்தனர். காசு கொடுத்து தக்காளியை வீண் செய்யும் இந்த வினோத திருவிழாவைக் கண்டு இந்திய மக்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். காரணம், இந்தியாவில் தக்காளியின் விலை அதிகரித்து காணும் நிலையில், ஸ்பெயினில் தக்காளியை வீண் அடிப்பதற்காகவே ஒரு வினோத திருவிழா நடத்துவது நமக்கு ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த தக்காளிகள் அதிக அமிலத்தன்மையுடன் புளிப்பு சுவை நிறைந்தவை. மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது அல்ல. இதற்காகவே, இந்த தக்காளிகள் தனிப்பட்ட முறையில் விளைவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. திருவிழா முடிந்த பின்பு, தெருக்களில் உள்ள தக்காளி கழிவுகளை, அதற்காக பணியமர்த்தப்பட்ட குழுவினர் நீரை பாய்ச்சியடித்து, சுத்தம் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow