Government Jobs Scam : அமைச்சர் உதயநிதி பெயரில் மோசடி; தந்தை - மகனை தட்டித்தூக்கிய போலீஸ்

Government Jobs Scam : அமைச்சர் உதயநிதியின் உதவியாளர் எனக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். உதயநிதியின் கையெழுத்தை மோசடியாகப் பயன்படுத்தி சிக்கிக் கொண்ட தந்தை மகன் குறித்து செய்தியில் பார்ப்போம்...

Aug 29, 2024 - 08:49
Aug 29, 2024 - 12:45
 0

Government Jobs Scam : அரசியல் பிரபலங்களுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களைக் காட்டி, அதை வைத்து மோசடிகளில் ஈடுபடுவதும், மோசடி நபர்களிடம் தெரியாமல் சிக்கிக் கொண்டு, பணத்தையும், வாழ்க்கையையும் தொலைத்துவிடுவதும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வரிசையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர், அமைச்சர் உதயநிதியின் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி ஏமாற்றியதாக தாம்பரத்தைச் சேர்ந்த தாமோதரன் மற்றும் அவரது மகன் ஹரிஷ் ஆகியோர் மீது புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனியார் கல்லூரியில் பேராசிரியரகப் பணியாற்றும் தாமோதரனும், மத போதகரான அவரது மகன் ஹரிஷும் உதயநிதியின் பெயரைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், உதயநிதியின் கையெழுத்தை மோசடியாகப் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதே போல,   உதயநிதியின் வாகனம் எனக்கூறி, தந்தையும் மகனும் மோசடிக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இதே போன்று வேறு யாரையும் ஏமாற்றி  உள்ளார்களா என்பது குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow