TVK Membership : தவெக உறுப்பினர் சேர்க்கை... நிர்வாகிகளுக்கு பரிசளிக்கிறாரா விஜய்?

TVK Vijay gifts to Membership Achievers at Vikravandi : மாவட்ட வாரியாக அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு விக்கிரவாண்டியில் நடக்கும் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பரிசளிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Aug 29, 2024 - 13:19
Aug 29, 2024 - 17:58
 0
TVK Membership : தவெக உறுப்பினர் சேர்க்கை... நிர்வாகிகளுக்கு பரிசளிக்கிறாரா விஜய்?
நிர்வாகிகளுக்கு பரிசளிக்கிறாரா விஜய்?

TVK Vijay gifts to Membership Achievers at Vikravandi : தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த 22ஆம் தேதியன்று தமிழக வெற்றிக்கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். மஞ்சள், சிவப்பு நிற கொடியில் யானைகள், வாகைப்பூ இடம் பெற்றுள்ளது.கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சை உருவாகியுள்ளது. அதற்குக் காரணம் கொடியில் இருந்த யானைதான். 

கட்சியின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தார். மாநாட்டுக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பு, கட்சியின் பொதுச்செயலாளரான பாண்டிச்சேரி ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முதலில், ஈரோடு மாவட்டத்தில்தான் மாநாடு நடத்துவதற்கு இடம் பார்க்கப்பட்டது. 'பெரியார் பிறந்த மண்' என்கிற அடிப்படையில், கட்சியின் தொடக்க விழாவை அங்கிருந்து தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டது.  தென்மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகள் கிடைக்காது. தவிர, நாம் எதிர்பார்க்கும் அளவில் ஈரோட்டில் இடமும் கிடைக்கவில்லை எனக் கட்சியிலுள்ள சீனியர் நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். இதனால் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் த.வெ.கவின் முதல் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். இதனையடுத்தே செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மாநாடுக்கான தேதியாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. \

மேலும் படிக்க: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா.... கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது!

நடிகர் விஜய் தனது கட்சியை பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய  நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். செப்டம்பர்  23ஆம் தேதியன்று தவெகவின் முதல் மாநாட்டினை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு கட்சி தலைமையில் இருந்து அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி மாவட்ட வாரியாக அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு விக்கிரவாண்டியில் நடக்கும் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பரிசளிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow