டிரம்ப் அமைச்சரவையில் தேசிய உளவுத்துறை தலைவராகிறார் துளசி கபார்ட் ..!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் தேசிய உளவுத்துறை தலைவராக துளசி கபார்ட்டை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Nov 15, 2024 - 03:14
 0
டிரம்ப்  அமைச்சரவையில் தேசிய உளவுத்துறை தலைவராகிறார் துளசி கபார்ட் ..!
டிரம்ப் அமைச்சரவையில் தேசிய உளவுத்துறை தலைவராகிறார் துளசி கபார்ட்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பால் தேசிய உளவுத்துறை இயக்குநராக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் காங்கிரஸ் பெண்மணி துளசி கபார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் போட்டியிட்டனர். கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில்,  இதில் கமலா ஹாரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், குடியரசு கட்சி சார்பில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2 முறையாக அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ஆட்சி நிர்வாகத்திற்கு ஏற்ப நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.  அதிபர் டிரம்பின் கடந்த ஆட்சிகாலத்தில்,உளவுத் துறை மீது நம்பிக்கையற்ற சூழலே இருந்து வந்தது. இந்நிலையில், உளவுத் துறையின் அதிகாரிகளையும், அவரது செயல்பாடுகளையும், மொத்தமாக மாற்றப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.  

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பால் தேசிய உளவுத்துறை இயக்குநராக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் காங்கிரஸ் பெண்மணி துளசி கபார்ட் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.  ட்ரம்ப் இவரை குறித்து வெளியிட்ட அறிக்கையில், '' "துளசி கபார்ட் தனது அச்சமற்ற உணர்வை எங்கள் புலனாய்வு சமூகத்திற்கு கொண்டு வருவார் என்று எனக்குத் தெரியும்" என்று தெரிவித்துள்ளார். ஜனநாயக உரிமையை வென்றெடுப்பதிலும் அமைதியைப் பாதுகாப்பதிலும் துளசி சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தேசிய உளவுத்துறையின் இயக்குநராக பதவியேற்க உள்ள துளசி, இதற்கு முன்னர்  ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கிடையேயான உளவுத்துறை ஆபரேஷன்களில் முக்கிய நபராக இருந்துள்ளார்.  ஜனநாயக கட்சியிலிருந்து, குடியரசுக் கட்சிக்கு மாறிய 2 ஆண்டுகளில் கபார்டிற்கு உளவுத்துறை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கபார்ட், டிரம்ப்பின் ஆதரவாளராகவும், வெளியுறவுக் கொள்கைக் கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.  பிரசாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு எதிராக வும், அக்கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். 

துளசி கபார்ட் என்ற பெயரை வைத்து இவர்,  இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்று பலர் தவறாக எண்ணுகின்றனர். ஆனால் இவரது தாய் கரோல் கப்பார்ட் இந்துவாக மதம் மாறியதால், இவரும் இந்து மதத்தின் மீது தீவிர பற்றுள்ளவராக திகழ்ந்தார்.  2013 ஆம் ஆண்டு அவர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கும் தேர்வான பொழுது இந்து மதத்தின் மீதுள்ள பற்றால், கபார்ட் பகவத் கீதையுடன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow