விரைவில் களமிறங்குகிறது OnePlus 13... மொபைல் லவ்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்!
OnePlus 13 Mobile Launch Update News : சீனாவில் இம்மாத இறுதிக்குள் OnePlus 13 மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
OnePlus 13 Mobile Launch Update News : சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான OnePlus, இம்மாத இறுதிக்குள் தனது புதிய தயாரிப்பான OnePlus 13 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போனின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது. விரைவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட் போனில் பேட்டரி அப்டேட்டட் வெர்ஷனில் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது OnePlus 12 மாடல் போனில் 5,400mAh பேட்டரி இருந்த நிலையில் OnePlus 13 மாடலில் 6,000mAh பேட்டரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மொபைல் போன் வேகமாக சார்ஜ் ஏரக்கூடிய கெப்பாசிட்டியை பெற்றிருக்கும். OnePlus 13 ஆனது Snapdragon 8 Gen 4 சிப்செட்டில் இயங்கும். இது 2K தெளிவுத்திறனுடன் 6.8 அங்குல டிஸ்பிளே பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த போனில் 120 Hz Refresh Rate, பஞ்ச் ஹோல் டிஸ்பிளே உள்ளிட்டவை இருக்கலாம் எனப்படுகிறது. 50 MP + 50 MP + 50 MP மூன்று பின்பக்க கேமராக்கள் மற்றும் 50 MP ஒரு முன்பக்க கேமரா இந்த போனில் அமைந்துள்ளது. Octa Core Processor-ல் இயங்கும் இந்த மொபைல் போனில் 256 GB மெமரி வழங்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர ஜிபிஎஸ், கையச்சு சென்சார், ஃபேஸ் அன்லாக், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் LPDDR5X RAM, Super Linear Stereo Dual Speakers, டால்பி அட்மோஸ், ஸ்பேட்டியல் அடியோ, eSIM Support உள்ளிட்ட அம்சங்களும் இருக்கின்றதாகக் கூறப்படுகிறது.
8K @ 24 fps UHD, 4K @ 30/60 fps UHD, 1080p @ 30 fps FHD போன்ற துல்லியமான வீடியோ காட்சிகளையும் இந்த போன் மூலம் நீங்கள் படம் பிடிக்க முடியும். மல்டிமீடியாவை பொருத்தவரை JPEG, PNG, BMP, GIF, WEB, HEIF, HEIC, DNG ஆகியவை இந்த புதிய ஸ்மார்ட் போனில் ஏற்றிக்கொள்ள முடியும் எனத் தெரிகிறது.
What's Your Reaction?