டெல்லி டூ அமெரிக்கா.. 30 நிமிடத்தில் செல்லலாம்.. அடித்துச் சொல்லும் எலான் மஸ்க்

டெல்லியில் இருந்து சான் பிரான்ஸிஸ்கோவிற்கு 30 நிமிடங்களில் பயணம் செய்யலாம் என எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார்.

Nov 19, 2024 - 01:40
Nov 19, 2024 - 01:45
 0
டெல்லி டூ அமெரிக்கா.. 30 நிமிடத்தில் செல்லலாம்..  அடித்துச் சொல்லும் எலான் மஸ்க்
டெல்லியில் இருந்து சான் பிரான்ஸிஸ்கோவிற்கு 30 நிமிடங்களில் பயணம் செய்யலாம் - எலான் மஸ்க் உறுதி

அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில் டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவியேற்பு வருகிற ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவையில் இடம்பெறவுள்ள செயலாளர்கள் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இதில், டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஸ்பேஸ் எக்ஸின் கனவு திட்டமான எர்த்-எர்த் விண்வெளி பயணத்திட்டம் விரைவில் நனவாகும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்பேக்ஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதன் மூலம் கண்டங்களுக்கு இடையிலான துரத்தை கணிக்க முடியாத வேகத்தில் கடக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பயணம் குறித்து டெய்லி மெயிலில் வெளியான செய்தியில், ஆயிரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த ஸ்டார்ஷிப் [Starship] ராக்கெட் பூமிக்கு இணையாக சுற்றுவதால் பயண நேரங்கள் வெகுவாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லாஸ் ஏஞ்சல்-இல் இருந்து டோரன்டோவிற்கு 24 நிமிடத்திலும், லண்டனில் இருந்து நியூயார்கிற்கு 29 நிமிடத்திலும், டெல்லியில் இருந்து சான்பிரான்ஸிஸ்கோவிற்கு 30 நிமிடத்தில் பயணிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் இந்த திட்டம் தொடர்பான புரொமோஷனல் வீடியோவை பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து டிரம்பின் அரசாங்கம் கண்டம் விட்டு கண்டம் பறகும் திட்டத்திற்கு சில வருடங்களில் அனுமதி கொடுக்கலாம் என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், மக்களின் ஆர்வத்தின் மூலம் இந்த திட்டம் உலகின் இணைப்பை மறுவரையறை செய்யும் என்றும் நிமிடங்களில் கண்டங்களை கடப்பது நனவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow