ஐயோ.. இனிமே உஷாரா இருங்க மக்களே... இதெல்லாம் சாப்பிட்டால் ஆபத்தாம்..!

மனிதர்கள் இந்த பத்து உணவு பொருட்களை சாப்பிட்டால் உடல் நலனுக்கு பேராபத்து என்று ஒரு லிஸ்ட் வெளியிட்டு உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

Aug 21, 2024 - 03:47
Aug 21, 2024 - 15:44
 0
ஐயோ.. இனிமே உஷாரா இருங்க மக்களே... இதெல்லாம் சாப்பிட்டால் ஆபத்தாம்..!

உணவு...  சம்பாதிப்பது சாப்பிடுவதற்காகத்தானே என்று பலரும் கூறுவர். ஆனால் ஆரோக்கியமானதை சாப்பிடுகிறார்களா என்று கேட்டால் அதில் 100ல் 10 சதவிகிதம் பேர் மட்டும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கின்றனர். கொழுப்பு, இனிப்பு பொருட்கள் போன்றவற்றை உட்கொள்ளாமல் தவிர்க்கவே அண்மை காலங்களில் டாக்டர்கள் அடிக்கடி தங்கள் நோயாளிகளுக்கு சொல்லி வருகின்றனர். அதோடு உணவுக் கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். 

ஆனால், அவற்றையெல்லாம் காதில் வாங்காமல், ’நா’ கேட்கும் ருசியை மையமாக வைத்து உணவு உட்கொள்வது, விதவிதமான உணவுகளை ருசி பார்ப்பது என  இருந்து வருகிறோம். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் எவ்வளவு முயற்சித்தாலும், மக்கள் அதை கேட்டுக் கொண்டது போல் தெரியவில்லை. உலக சுகாதார அமைப்பு நமது நீண்ட கால ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய பல்வேறு உணவுகள், பானங்கள் குறித்து தொடர்ந்து கவலைகளை எழுப்பியுள்ளது. 

ஆல்கஹாலின் நன்கு அறியப்பட்ட அபாயங்களுக்கு அப்பால், சில தினசரி ஸ்டேபிள்ஸ் நீங்கள் உணர்ந்ததை விட அதிக தீங்கு விளைவிக்கும். இந்த நிலையில், உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள் குறித்து ஓர் முக்கிய தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், சர்க்கரை, வறுக்கப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்ஸ், காபி, உப்பு, உருளை, பேகன், சாசேஜ்கள், பாமாயில், பர்கர், பீட்சா, சீஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சமச்சீர் உணவுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் பல்வேறு உணவுகளின் தாக்கத்தை அறிந்து கொள்வது முக்கியம். இந்த பத்து ஆரோக்கியமற்ற உணவுகளின் நுகர்வு குறைப்பதன் மூலம் மற்றும் உங்கள் உணவில் ஆரோக்கியமான விருப்பங்களை இணைத்துக்கொள்வதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow