Herbal Tea : மழைக்கால நோய்கள் : அஜீரணம், வாயு தொல்லையை விரட்டும் மூலிகை டீ!
Herbal Tea for Indigestion and Gastric Problems Tips : மழைக்காலத்தில் வரக்கூடிய அஜீரணப் பிரச்சனைகள், வாயு தொல்லைகளை ஒழித்துக்கட்டக்கூடிய சூப்பர் ஹெர்பல் டீ ரெசிப்பி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Herbal Tea for Indigestion and Gastric Problems Tips : இப்போ மழை வெளுத்து வாங்கி வருது. மழைக்காலம் வந்தாலே கூடவே பல்வேறு உடல் பிரச்சனைகளும் சேர்ந்து வந்துரும். அதுல செரிமானப் பிரச்சனை முதன்மையானதுனே சொல்லலாம். மழை நேரங்களில் சுகாதாரமற்ற தண்ணீரில் இருக்ககூடிய பேக்டீரியா மற்றும் வைரஸினால் முதலில் பாதிக்கப்படுவது நம்ம குடல் தான். இதனால் அஜீரனக் கோளாறு, கேஸ், வயிற்று உப்புசம் போன்ற பல பிரச்சனைகள் லைன் கட்டி நிற்கும். இதற்கு நம்ம சமயலறையில இருக்கக்கூடிய மூலிகைகளினால் டீ செஞ்சு குடிச்சாலே இந்த பிரச்சனைகள சுலபமா சரி செய்திடலாம். இது மட்டும் இல்லாம தினமும் ஹெர்பல் டீ குடிப்பதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு இதய ஆரோக்கியமும் மேம்படுவதாக மருத்துவர்கள் சொல்றாங்க.
இப்போ ஹெர்பல் டீ ரெசிபி குறித்து பார்ப்போமா?
இஞ்சி டீ:
சளி, இருமல், தும்மல், தொண்டை கரகரப்பு இப்படியான பிரச்சனைகள் இருக்கும்போதே நம்ம கால்கள் தானாகவே இஞ்சி டீயை தேடி ஓடிடும். ஆனால் இது அஜீரனக் கோளாறுகளையும் சரி செய்யும்னு சொன்னா ஆச்சரியமா இருக்குல. இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் குடலில் உள்ள என்சைம்களை (enzymes) தூண்டி சீறான செரிமானத்திற்கு உதவுது. 2 அல்லது 3 சிறிய துண்டுகள் இஞ்சையை 1 டம்ளர் தண்ணீரில் 10 - 15 நிமிஷம் கொதிக்க வைங்க. பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி மிதமான சூட்டில் குடிச்சா... அஜீரனத்திற்கு பை பை!
சோம்பு டீ:
எண்ணெய் அதிகமுள்ள உணவுகள் கூட எளிதாக ஜீரணமாக சோம்பு உதவுது. சோம்பை சிறிதளவு எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடிக்கலாம்.
புதினா டீ:
புத்துணர்ச்சி என்றாலே அது புதினாதான். வாய் துர்நாற்றம், செரிமானப் பிரச்சனைகள் போன்றவை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. 2 - 3 புதினா இலைகளை எடுத்து தண்ணீரில் காய்ச்சியும் குடிக்கலாம் அல்லது தேநீரில் சேர்த்தும் குடிக்கலாம். அஜீரனத்தால் ஏற்படும் வயிற்றுப் பிடிப்புக் கூட இருக்கிற இடம் தெரியாமல் ஓடி விடும்.
மேலும் படிக்க: வெறும் வயிற்றுல பீட்ரூட் ஜூஸ்
துளசி டீ:
ஆயுர்வேதம் என்று வந்துட்டாலே அதில் முதன்மையாக இருப்பது துளசி. தினமும் காலையில் துளசி டீ குடுத்து வந்தால் அஜீரணம் மட்டுமல்ல மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்கள் கூட சரியாகுமாம். இதைத்தவிர வயிற்று உப்புசம், வாயு தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளும் அடியோடு நீங்கும் என மருத்துவர்கள் சொல்றாங்க.
What's Your Reaction?