Beetroot Juice Benefits : வெறும் வயிற்றுல பீட்ரூட் ஜூஸ்! தலை முதல் கால் வரை அளிக்கும் நன்மைகள்

Beetroot Juice Drinking in Empty Stomach Benefits in Tamil : Benefits காலையில எழுந்ததுமே வெறும் வயிற்றுல ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்குறது நம்ம உடலுக்கும் மனதுக்கும் அவ்வளவு நன்மைகள் தருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இப்போ இருக்குற தலைமுறையினர் மத்தியில பீட்ரூட் ஜூஸ் மிகவும் பிரபலமா இருக்கு. தலை முதல் பாதம் வரை எண்ணெற்ற நன்மைகள இந்த ஒரு ஜூஸ் வழங்குவதாக மருத்துவர்களும் சொல்றாங்க.

Aug 5, 2024 - 13:16
Aug 5, 2024 - 17:49
 0
Beetroot Juice Benefits : வெறும் வயிற்றுல பீட்ரூட் ஜூஸ்! தலை முதல் கால் வரை அளிக்கும் நன்மைகள்
Beetroot Juice Drinking in Empty Stomach Benefits in Tamil

சீறான நைட்ரிக் ஆக்ஸைடு அளவு!

Beetroot Juice Drinking in Empty Stomach Benefits in Tamil : பொதுவாகவே காலையில நம்ம தூங்கி எழும்போது நம்ம உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு அளவு மிகவும் குறைவாக இருக்கும். இந்த அளவை உடனடியாகவே அதிகப்படுத்துறதுக்கு பீட்ரூட் ஜூஸ்(Beetroot Juice) ரொம்பவே உதவுது. நரம்புகளில் உருவாகக்கூடிய இந்த நைட்ரிக் ஆக்ஸைடு உடம்புல ரத்த ஓட்டம் சீறாக இருக்க உதவக்கூடிய ஒன்று. இது ரத்த அழுத்தம் வராம தடுப்பதோடு உடலில் ஆக்ஸிஜன் அளவு சீறாக இருக்கும்படியும் பார்த்துகுது. தினமும் காலையில வெறும் வயிற்றுல பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால நைட்ரிக் ஆக்ஸைடு பூஸ்ட் ஆவதாக மருத்துவர்கள் சொல்றாங்க. 

புத்துணர்ச்சி மற்றும் உத்வேகம்!

காலை உணவை சரியாக எடுத்துக்கொள்ளாதவங்களோட உடல் ஆற்றல் மிக மிக குறைவாக இருக்கும். இதனால அவர்கள் எப்போதுமே சோர்வாகவே இருப்பாங்க. இதை பீட்ரூட் ஜூஸ்(Beetroot Juice Benefits) தடுக்குது. வெறும் வயிற்றுல ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிச்சாலே ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான முழு ஆற்றல் கிடைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. Sports-ல இருக்குறவங்க, Athletics-ல இருக்குறவங்களுக்கு இந்த ஜூஸ் ரொம்பவே உதவிகரமாக இருக்குமாம். 

ஆரோக்கியமான இதயம்!

இப்போ இருக்குற காலத்துல ஒழுங்கற்ற உணவு பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் இதய நோய்க்கு வழிவகுக்குது. பீட்ரூட் ஜூஸில்(Beetroot Juice) இருக்குற வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் இதர சத்துக்கள் இதயத்துக்கு சீறான ஆக்ஸிஜன் கிடைக்க உதவுவதோடு ரத்த ஓட்டத்தையும் சீறாக பார்த்துக்கொள்கிறது. உங்க இதயம் ஆரோக்கியமானதாக இருந்தாலே நீண்ட நாள் வலுவான வாழ்க்கைக்கு கியாரண்டிதான்! 

உடல் எடை குறைப்பு! 

உடல் எடையை குறைக்க நினைக்குறவங்களுக்கு பீட்ரூட் ஜூஸ் ரொம்பவே உதவியாக இருக்கும். பீட்ரூட்டில் கலோரிகள் மிக மிக குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்குது. காலையில எழுந்ததும் ஒரு பீட்ரூட்டை துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில போட்டு அரைத்து சாறு எடுத்து, 2 - 3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடிச்சு பாருங்க. ருசிக்கு ருசியும் ஆச்சு... டயட்டுக்கு டயட்டும் ஆச்சு. 

வலுவான தசைகள்! 

பீட்ரூட்டில் அதிகளவு பொட்டாசியம், எலெக்ட்ரோலைட் மற்றும் மினரல்கள் இருக்கிறது. பீட்ரூட் ஜூஸை நீங்க தினமும் குடிப்பதால உங்கள் தசை வலுவாவதோடு உடலுக்கு தேவையான பொட்டாசியம் அளவும் சரியாக இருக்கும். பொட்டாசியம் உடலுல குறைவாக இருக்கும்போதுதான் தசை வலி, சிறுநீரகக் கோளாறு, சீறற்ற இதயத் துடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு பீட்ரூட் ஜூஸ் ஒரு சிறந்த தீர்வாக அமைவதாக மருத்துவர்கள் சொல்றாங்க. 

மேலும் படிக்க: இந்திய அணி தோல்விக்கு இவர்தான் காரணம்.. ஒப்பனாக பேசிய ரோகித் சர்மா!

பொலிவான சருமம்!

முகப்பரு, ஹைப்பர் பிக்மெண்டேஷன், சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்றவங்களுக்கு பீட்ரூட் ஜூஸ் ஒரு சிறந்த தீர்வு. இதிலுள்ள அயர்ன், ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் மினரல்கள் சருமத்திற்கும் கேசத்திற்கும் ரத்த ஓட்டம் சீறாக செல்ல உதவுது. இதனால உங்களது சருமம் உள்ளிருந்து ஆரோக்கியம் பெறுவதோடு பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாம அதிக முடி உதிர்வு பிரச்சனையையும் உடனடியாக சரி செய்யும் தன்மை இந்த மேஜிக் ஜூஸில் இருக்கிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow