Vidaamuyarchi Twitter Review: விடாமுயற்சி வீண் முயற்சியா..? அஜித் வெற்றி பெறுவாரா..? எக்ஸ் விமர்சனம் இதோ

Vidaamuyarchi Twitter Review : நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் இப்படத்தின் விமர்சனம் குறித்து ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Feb 6, 2025 - 13:46
Feb 6, 2025 - 13:54
 0
Vidaamuyarchi Twitter Review: விடாமுயற்சி வீண் முயற்சியா..? அஜித் வெற்றி பெறுவாரா..? எக்ஸ் விமர்சனம் இதோ
Vidaamuyarchi Twitter Review
Vidaamuyarchi Twitter Review: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் 'துணிவு’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன்,  ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர், ரம்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு\ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் இன்று (பிப். 5) உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. 

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்கின் முன்பு குவிந்தனர்.  திரையரங்குகளின் வாயில்களில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ஆடல், பாடல் உடன் பட வெளியீட்டை கொண்டாடினர். நடிகை திரிஷா, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஆரவ் ஆகியோர் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் பார்த்தனர்.

இந்த நிலையில், ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். சிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவிக்காது என்றும் சிலர் படம் சிறப்பாக இருக்கிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதள விமர்சனம் இதோ:

பயனாளர் 1

விடாமுயற்சி - வீண்முயற்சி, அஜித்தின் திரை தோற்றம் அருமையாக உள்ளது. அஜித் - திரிஷா காதல் காட்சிகள் சுவாரஸ்யமற்ற இருக்கிறது. இசை ஓகே, பாட்டு நன்றாக உள்ளது. அஜர்பைஜானின் நிலப்பரப்பு சார்ந்த காட்சிகள் சிறப்பாக உள்ளது. வலிமையற்ற கதைக்களம்,  திருப்பங்கள் இன்றி சுவாரஸ்யமற்று இருக்கிறது. மொத்தத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஏமாற்றம் என்று பதிவிட்டுள்ளார்.

பயனாளர் 2

'விடாமுயர்ச்சி’ திரைப்படம் சுவாரஸ்யமான கதைக்களத்தையும், சில நேர்த்தியான திருப்பங்களையும் கொண்டுள்ளது. ஆனால் கதை மிகவும் மெதுவாக நகர்வதால், சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. கதைக்களம் சில திருப்பங்களுடன் வருகிறது. ’விடாமுயற்சி’ திரைப்படம் ஸ்டைலாக எடுக்கப்பட்டுள்ளது. அனிருத்தின் இசை படத்திற்கு சேரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

பயனாளர் 3

’விடாமுயற்சி’ திரைப்படம் ஹாலிவுட் தரத்துக்கு இணையாக உள்ளது. இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளது.  பின்னணி இசை அபாரம். தமிழ் திரையுலகின் ஓப்பனிங் காட்சியில் தன்னிகரற்ற மன்னனாக அஜித் விளங்குகிறார். இரண்டு வருட காத்திருப்பு பலனை தந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

The film is exceptional, on par with Hollywood standards. The craftsmanship is outstanding, and the visuals are a visual feast for the audience. The background score is fabulous. AK proves to be the undisputed king of opening performances in Kollywood. The two-year wait was… pic.twitter.com/nkRTsqIDkE

— Calm Banker (@calm_banker) February 6, 2025

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow