Ajith: புதிய ரேஸ் கார்... கெத்து காட்டும் அஜித்... அந்த சிரிப்பு தான் ஹைலைட்... வைரலாகும் வீடியோ!

அடுத்தடுத்து பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களை வாங்கி வரும் அஜித், தற்போது புதிய காருடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Oct 14, 2024 - 20:42
Oct 14, 2024 - 20:43
 0
Ajith: புதிய ரேஸ் கார்... கெத்து காட்டும் அஜித்... அந்த சிரிப்பு தான் ஹைலைட்... வைரலாகும் வீடியோ!
அஜித்தின் புதிய வீடியோ வைரல்

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித்குமார், ஒரே நேரத்தில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி, அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகிறது. விடாமுயற்சி படத்தின் 90 சதவீதம் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பைக் டூர் சென்று வந்தார் அஜித். அதேபோல், அடிக்கடி துபாய் சென்ற அஜித், அங்கு ரேஸ் கார் ஓட்டுவதற்கும் பயிற்சி எடுத்து வந்தார். 

பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ரேஸ் கார் டிரைவிங் பயிற்சி எடுத்து வரும் அஜித், அடுத்தாண்டு நடைபெறும் யூரோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ளார். மேலும் துபாயில் இரண்டு புதிய ரேஸ் கார்களை அஜித் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் அஜித்தின் புதிய கார் வீடியோக்கள் வைரலாகி வந்தன. அந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு வீடியோ அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில், பல கோடி ரூபாய் மதிப்புடைய கார் ஒன்றை அஜித் ஆன் செய்து ஆக்ஸிலேட்டர் கொடுக்கிறார். 

அப்போது சிரித்துக்கொண்டே அஜித்குமார் கொடுக்கும் ஒரு லுக், ரசிகர்களுக்கு செம வைப் கொடுத்துள்ளது. அதேநேரம் இது அஜித் சொந்தமாக வாங்கியுள்ள காரா..? அல்லது ஏதேனும் ஷோ ரூமில் டெஸ்ட் டிரைவ் பார்க்கும் போது எடுக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. கடந்த சில மாதங்களாகவே அஜித்தின் போட்டோஸ், வீடியோக்கள் அதிகளவில் வைரலாகி வருகின்றன. பப்ளிசிட்டியை விரும்பாத அஜித், இப்போதெல்லாம் அடிக்கடி டிவிட்டரில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், விடாமுயற்சி, குட் பேட் அக்லி-ஐ தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ஏகே 64 படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என ஏற்கனவே 4 படங்களில் இக்கூட்டணி இணைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அஜித் – சிறுத்தை சிவா காம்போவில் ஏகே 64 படம் உருவாகவுள்ளதாக வெளியான தகவல், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.        

வைரலாகும் அஜித்தின் புதிய ரேஸ் கார் வீடியோ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow