Gnanasekaran Case: ஞானசேகரனுக்கு 2 மணி நேரம் குரல் பரிசோதனை.. என்ன நடந்தது?
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் தடயவியல் துறை அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை 2மணி நேரமாக நடைப்பெற்றது.
செல்போனில் உரையாடல் நடத்தியுள்ள நபர் ஞானசேகரன் தானா என்பதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க ஞானசேகரனை விதவிதமாக பேசச்சொல்லி குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு குரலிலும் ஒவ்வொரு ஒலி மற்றும் உச்சரிப்பு வேறுபாடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 மணி நேரமாக குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு ஞானசேகரனை சைதாப்பேடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?