Sivakarthikeyan: வெற்றிமாறன் முன்னிலையில் தனுஷை வம்பிழுத்த சிவகார்த்திகேயன்... மீண்டும் ஈகோ யுத்தம்!

கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், தனுஷை வம்பிழுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் பேசியது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 14, 2024 - 02:41
Aug 14, 2024 - 15:29
 0
Sivakarthikeyan: வெற்றிமாறன் முன்னிலையில் தனுஷை வம்பிழுத்த சிவகார்த்திகேயன்... மீண்டும் ஈகோ யுத்தம்!
தனுஷ் - சிவகார்த்திகேயன்

சென்னை: சூரி நடிப்பில் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் 23ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் மிஷ்கின், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கொட்டுக்காளி படத்தின் ப்ரோமோஷனுக்காக நிர்வாணமாக நடனம் ஆட ரெடி என மிஷ்கின் பேசியது வைரலானது. அதைவிட சிவகார்த்திகேயன் செய்த சம்பவம் தான் இப்போது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.    

அதாவது “சினிமாவில் யாருக்கும் வாய்ப்பு கொடுப்பதால், நான் தான் அவருக்கு வாழ்க்கை கொடுத்தேன், நான் தான் ரெடி பண்ணேன் என எதுவும் சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னையும் அப்படி சொல்லி சொல்லி பழக்கிவிட்டாங்க. ஆனால் அந்த மாதிரியெல்லாம் நான் கிடையாது” எனக் கூறியிருந்தார். இது தனுஷை மறைமுகமாக அட்டாக் செய்வது போல் உள்ளது என சிவகார்த்திகேயன் ரசிகர்களே வெளிப்படையாக பேசி வருகின்றனர். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டான சிவகார்த்திகேயன், பிரபல தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமானார். அதன்மூலமே அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 

அதன்படி மெரினா திரைப்படம் மூலம் என்ட்ரியான சிவகார்த்திகேயனுக்கு தனது 3 படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்தார் தனுஷ். அப்போது முதல் தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் என்ற இந்த மும்மூர்த்தி கூட்டணி கோலிவுட்டில் புதிய அவதாரம் எடுத்தது. அதுமட்டும் இல்லாமல் தனது சொந்த தயாரிப்பில் உருவான எதிர் நீச்சல் படத்தில், சிவகார்த்திகேயனை சிங்கிள் ஹீரோவாக்கி அழகுப் பார்த்தார் தனுஷ். கிட்டத்தட்ட சிவகார்த்திகேயனின் காட்ஃபாதர் போல அவருக்கு வழிகாட்டினார் தனுஷ். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக தனது மார்க்கெட்டை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுச் சென்ற சிவகார்த்திகேயன், பின்னர் மாஸ் ஹீரோக்களின் லிஸ்ட்டில் இடம் பிடிக்கத் தொடங்கினார். 

அப்போது தான் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரிக்க தனுஷ் பிளான் செய்ததாகவும், ஆனால் சிவா அதிகம் சம்பளம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தனுஷ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் விரிசல் விழ, அப்படியே அது ஈகோ யுத்தமாக மாறியது. அதன்பின்னர் தனுஷ் – சிவகார்த்திகேயன் இருவரும் பேசிக்கொள்வதே கிடையாது. இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸாகின. ஆனால், இந்த இரண்டு படங்களுமே எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் சில மாதங்களுக்கு முன்னால் தனது மனைவியை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் தான் காரணம் என இசையமைப்பாளர் டி இமான் பேசியதும் சர்ச்சையானது. இதற்கு சிவகார்த்திகேயன் எந்தவித விளக்கமும் கொடுக்காமல் இருக்க, அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. அப்போது இதன் பின்னணியில் தனுஷ் இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதுவும் சர்ச்சையானது. அதேநேரம் பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தனுஷ் ஒருகட்டத்தில் அடுத்தடுத்து நஷ்டங்களை சந்தித்ததால், நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கினார். அதேபோல், சிவகார்த்திகேயனுக்கும் அவரது தயாரிப்பில் வெளியான படங்கள் தோல்வியடைந்ததால் பல கோடிகளை இழந்து கடனில் சிக்கித் தவித்தார்.

மேலும் படிக்க - விஜய்யின் கோட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

ஆனால், அதிலிருந்து மீண்டு வந்துள்ள சிவகார்த்திகேயன், தனுஷுக்கு பதிலடி கொடுக்கவே அப்படி பேசியதாக சொல்லப்படுகிறது. அதிலும் முக்கியமாக இயக்குநர் வெற்றிமாறனை மேடையில் வைத்துக்கொண்டே சிவகார்த்திகேயன் தக் லைஃப் கொடுத்துள்ளார். அதாவது வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான பொல்லாதவன் படத்தில் தனுஷ் தான் ஹீரோ. அப்போது வெற்றிமாறனை தனுஷ் அறிமுகப்படுத்திய வீடியோவை, இப்போது நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில், “இவர் தான் வெற்றிமாறன், இவரை என்னோட படத்தில் இயக்குநரா அறிமுகம் செய்றேன்” என பேசியுள்ளார். அதேபோல், தனுஷ் குறித்து அனிருத் பேசியதும் இந்த வீடியோவில் எடிட் செய்து சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow