GOAT Trailer: “வெங்கட் பிரபு சாரே எல்லாரும் வெயிட்டிங்..” சொன்னபடி வந்த கோட் ரிலீஸ் தேதி அப்டேட்!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் கொடுத்துள்ளார்.

Aug 13, 2024 - 19:45
Aug 14, 2024 - 09:59
 0
GOAT Trailer: “வெங்கட் பிரபு சாரே எல்லாரும் வெயிட்டிங்..” சொன்னபடி வந்த கோட் ரிலீஸ் தேதி அப்டேட்!
GOAT Trailer Release Date

சென்னை: தளபதி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள கோட் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படத்துக்கும் இதேபோல அதிக ஹைப் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் திரைக்கதை சொதப்பியதால் லியோ சூப்பர் ஹிட் ஆகவில்லை. அதேநேரம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்தது லியோ. இப்படத்தின் ஷூட்டிங் முடியும் முன்பே வெங்கட் பிரபுவின் கூட்டணியை கன்ஃபார்ம் செய்துவிட்டார் தளபதி விஜய்.  

அதன்படி லியோ திரைப்படம் ரிலீஸான உடனே, பிரம்மாண்டமாக தொடங்கியது கோட் படப்பிடிப்பு. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, ஜெயராம் என மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணியும் இப்படத்தில் இணைந்தது. எப்போதும் சிங்கிள் ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே விஜய்க்கு விருப்பம். ஆனால், லியோ, கோட் என இந்த இரண்டுமே மல்டி ஸ்டார்ஸ் படங்களாக உருவாகியுள்ளது. இந்நிலையில், கோட் படத்தில் விஜய் இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளதை உறுதி செய்துவிட்ட படக்குழு, இதுவரை மூன்று பாடல்களையும் வெளியிட்டது.

அதேபோல் விஜய்யின் பிறந்தநாளில் அவரது கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கோட் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “கோட் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அப்டேட் நாளை (ஆக.14) மாலை 6 மணிக்கு வெளியாகும்” என தெரிவித்துள்ளார். அதேபோல் இயக்குநர் வெங்கட் பிரபுவை டேக் செய்துள்ள அவர், ட்ரெய்லருக்காக காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். இதனால் கோட் ட்ரெய்லர் இந்த வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.   

மேலும் படிக்க - இடம் மாறும் தவெக விஜய்யின் முதல் அரசியல் மாநாடு

ஒருபக்கம் தொடர்ந்து கோட் அப்டேட்டாக வெளியானாலும், இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோல், போஸ்ட் புரொடக்ஷன், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா பற்றியும் படக்குழு அறிவிக்கவில்லை. முதலில் கோட் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதற்கு விஜய் நோ சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், படம் வெளியாகி சில தினங்களிலேயே லியோ சக்சஸ் மீட் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதேபோல் கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் நோ சொல்லிவிட்டதாகவும், சக்சஸ் மீட்டிங் வேண்டுமானால் நடத்திக்கொள்ளலாம் எனவும் சிக்னல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஃபேமிலி சென்டிமென்ட்டில் ஆக்ஷன் ஜானர் மூவியாக உருவாகியுள்ள கோட், விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். விஜய்யுடன் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், கேப்டன் விஜயகாந்த்தை ஏஐ டெக்னாலஜியில் பயன்படுத்தியுள்ளாராம் வெங்கட் பிரபு. இதுவும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow