ஜாபர் சாதிக் ஜாமீன் மனு - அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், கைதான ஜாபர் சாதிக் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவிற்கு வரும் 2 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nov 30, 2024 - 03:13
 0
ஜாபர் சாதிக்  ஜாமீன் மனு - அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
ஜாபர் சாதிக்

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் தாக்கல் செய்த ஜாமீன்  மனுவிற்கு பதிலளிக்க, வரும் டிசம்பர் 2 ம் தேதி வரை   அமலாக்கதுறைக்கு அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான  ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26 தேதி கைது செய்தது.
 பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்தது.

இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், வழக்கின் 302 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட   12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்-கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட தன்னிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிவுற்று குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யபட்டுள்ளதால்  ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜாபர் சாதிக் தாக்கல் செய்த  ஜாமீன் மனு  நீதிபதி எழில் வேலவன் முன் விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது அமலாக்கத் துறை தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பதில் மனுத்தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு டிசம்பர் 2ம் தேதி வரை  அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow