இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பானிப்பூரி விற்கிறார்கள் - ஏ.வ. வேலு பேச்சு
இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வந்து கொத்தானார் வேலையும், பானிபூரியும் விற்கிறார்கள் என்று வாணியம்பாடியில் நடைப்பெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர், ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள வாரசந்தை பகுதியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த விழாவையையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 2000 குடும்பங்களுக்கு, இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா நடைப்பெற்றது , இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர்,
மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய மானியத்தை குறைத்தால் எப்படி ஆட்சியாளர்களுக்கு பெயர் வரும் என கருதுகிறது. தமிழரின் கீழடி வரலாற்றில் 5300 ஆண்டுகளுக்கு முன் இரும்புகாலம், தமிழரின் காலம் என உலகிற்கு அறிவித்தவர் ஸ்டாலின், அவர் இரும்பு மனிதர் தாய்மொழிக்காக எவருக்கும் மண்டியிட மாட்டேன் என அறிவிக்கிறார்.
ஆனால் பலர் மத்திய அரசுக்கு பயந்து மண்டியிட்டு இருப்பார்கள். மேலும் நிதி தராமல் இருப்பதோடு, மட்டுமில்லாமல், தன்மானத்தின் மீது கை வைக்கிறார்கள், பண்பாட்டின் அடையாளம் தான் மொழி, வட இந்தியர்கள், வேட்டை, சட்டை கட்டமாட்டார்கள், உடைகளிலேயே பழக்கம் வேறு, பண்பாட்டின் அடையாளத்தின் உச்சம் தான் மொழி, நமது தாய்மொழி தமிழ்மொழியை அழிக்க படையெடுப்பு நடக்கிறது.
3 ஆவது மொழியாக இந்தி, அல்லது சமஸ்கிருதம் கற்க வேண்டும் என கூறுகிறார்கள், 500 ஆண்டுகளுக்கு வந்த மொழி இந்தி, 4000 ஆண்டுகளுக்கு முன் வந்த தமிழ்மொழி என்பதால் டெல்லி அமைச்சர்கள், வணக்கம், நன்றி என்று கூட கூறுவதில்லை, அவர்களுக்கு நன்றி, வணக்கம் கூட எழுத தெரிவதில்லை,
பிரதமர் மோடி, தமிழ் பிடிக்கும் எனக்கூறி, ஐநாவில் தமிழ் படிக்கிறீர்கள் ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன் வந்த இந்தி மொழியிற்காக தமிழ் மீது படையெடுத்து வருகிறீர்கள் இது நியாயம் தானா என கேள்வி எழுப்பினார்.
முன்னொரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவ படிப்பு படிக்க முடியும், அதற்கு எதிராக போராடியவர்கள், பெரியார, அண்ணா கலைஞர், இங்குள்ள சில ஏஜென்ட்டுகள் அவர்களை ஏஜென்டுகள் தான் என அழைப்பேன் அவர்களுக்காக தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை, ஏஜென்ட்டுகள் கூறுகிறார்கள், இந்தி படித்தால் விரிவடைவார்கள் என்று , உத்திர பிரதேசம், பீகார், டெல்லி, மத்திய பிரதேசத்தில், இந்தியை தாய்மொழியாக பயின்றவர்கள், எல்லாம் தமிழ்நாட்டில் வந்து கொத்தானார் வேலையும், பானிபூரியும், பஞ்சுமிட்டாயும், விற்கிறார்கள்.
சமஸ்கிருதம் படித்து, மருத்துவராக முடியுமா, வெளிநாட்டில் போய் பொருளாதார வளர்ச்சி அடையமுடியுமா, இந்தி படித்தால், கொத்தனார் வேலைக்கும், டோல்கேட்டிற்கும், தான் வேலை செய்வார்கள், அமெரிக்காவிற்கு போகமாட்டார்கள்.
தொடர்பு மொழியை படித்ததால் தான் வெளிநாட்டில் சென்று ஆங்கிலம் பேச முடிகிறது, பொருளாதார வளர்ச்சி அடைய முடிகிறது. தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கையில் படித்த அப்துல்காலம், மயில்சாமி அண்ணாதுரை நாட்டின் உயர்ந்த நிலைக்கு சென்றனர். தேசிய கல்விக்கொள்கையுடன் ஒத்துப்போக தயாராக இல்லை, அதனை மண்டியிட்டு நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்,
தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனைத்து நிதியையும் தருவது தமிழக அரசு தான், ஆனால் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிற்கு தமிழே தெரியதவர்களை நியமிக்க ஆளுநர் முயல்கிறார்கள், அதனை எதிர்த்து துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக முதல்வர் வழக்கு தொடர்ந்திருக்கிறார், தமிழனின் அடையாளம் அழிந்து விடும், தமிழை போற்றுவோம், முதல்வர்பின் நிற்போம், இந்தி பேயை ஓட்டுவோம் என பேசினார்.
அதனை தொடர்ந்து 2000 குடுபங்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமார், மற்றும் திமுகவினர் பலர் பங்கேற்றனர்...
What's Your Reaction?






