தமிழ்நாடு

ஒசூரில் பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது...!

ஒசூரில் கடந்த 2 மாதங்களாக பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பை சேர்ந்த அதன் தலைவனை காவல் துறையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒசூரில்  பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது...!
ஒசூரில் பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது...!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தலப்புழா பகுதியில், கன்னி வெடிகள் வைத்த சம்பவம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட தமிழகம் மற்றும் கேரளாவில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நக்சல் இயக்கத்தின் அனைத்து தலைவர்களும், கைது செய்யப்பட்ட நிலையில் சந்தோஷ் தமிழகத்திற்குள் இடம்பெயர்ந்துள்ளதாக, கேரளாவின் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம் நகரில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு வாலிபர் ஒருவர், பெயின்டர் எனக்கூறி வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். இவர் கேரள மாநிலத்தில் தேடப்பட்டு வரும் நக்சலைட் ஆவார். இவரது கூட்டாளிகளான 2 பேரை, கேரள மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, வயநாடு பகுதியில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, மற்றொரு நக்சலைட்டான சந்தோஷ் என்பவரை, கேரள போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தோஷ், ஓசூரில் பதுங்கி இருப்பதை அறிந்த கேரள போலீசார், நேற்று முன்தினம் ஓசூர் வந்தனர். அவர்கள் நள்ளிரவு ஒரு மணி அளவில், ஓசூர் ராம் நகர் பகுதிக்கு சென்று, சந்தோஷை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கேரள மாநிலத்தில் இருந்து மேலும் சில நக்சலைட்டுகள், தமிழகத்திற்குள் நுழைந்ததாக சந்தேகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், கேரள மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், தொடர்ந்து நக்சல் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கேரள மாநிலத்தின் நக்சல் இயக்கத்தின் கடைசி தலைவராக செயல்பட்ட வர் சந்தோஷ். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியை சேர்ந்தவர். சந்தோஷ் கடந்த 2014ம் ஆண்டு, வீட்டை விட்டு வெளியேறி நக்சல் இயக்கத்தில் சேர்ந்து, செயலாற்றி வந்துள்ளார்.

அவனை கேரளாவுக்கு அழைத்து வந்தனர். பின்னர், இன்று (பிப். 22) மதியம் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விரைவில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசிய புலனாய்வுத்துறை போலீசாரும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் கேரளா மாநிலத்தில் முகாமிட்டிருந்த, நக்சல்களின் கடைசி தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.