நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்க முதல்வர் மருந்தகம் - எழிலன் பேச்சு

முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என திமுக மருத்துவர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் தெரிவித்துள்ளார். 

Feb 23, 2025 - 16:10
 0
நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்க முதல்வர் மருந்தகம் - எழிலன் பேச்சு
நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்க முதல்வர் மருந்தகம் - எழிலன் பேச்சு

சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எழிலன், முதல்வர் மருந்தகம் திட்டத்தை தமிழக முதல்வர் நாளை திறக்க உள்ளதாக தெரிவித்தார்.

நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் அதை குறைக்கும் விதமாக முதல்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள்  திறக்கப்பட உள்ளதாக கூறினார்.  

தொடர்ந்து முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்  என்றும் முதல்வர் மருந்தகம் திறப்பதற்க்கு 3 லட்சம் வரை அரசு மானியம் வழங்குகிறது என தெரிவித்தார்.

நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படும் என கூறினார்.

மருந்துகளை ஆய்வு செய்து தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்த அவர், மாநில பட்டியலில் கல்வியும் சுகாதாரமும் இருந்தால் தான் மக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும் கூறினார். 

தனியார் மருத்துவமனைகளில் ஜெனரிக் மருந்துகளை எழுதாமல், பிராண்டட் மருந்துகளை எழுதும் முறையை தான் பின்பற்றுவதாகவும், ஆகவே தான் தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரி செய்ய தற்போது ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்யும் வகையில் முதல்வர் மருந்தகங்களை தொடங்கப்படுகிறது என தெரிவித்தார்.

முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என கூறிய அவர் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எந்த ஆட்சியில் கொண்டுவந்தாலும் அவை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் முதல்வர் மருந்தகம் திறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த எழிலன், மக்கள் நலன் சார்ந்த ஒரு திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில் முதல்வர் மருந்தகம் திறப்பதில் தவறு ஏதும் இல்லையே என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow