கிராம சபைகளில் வலுத்த மக்களின் எதிர்ப்பு குரல்.. சூடுபிடித்த முக்கிய விவாதங்கள் இவைதான்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

Oct 2, 2024 - 21:42
 0
கிராம சபைகளில் வலுத்த மக்களின் எதிர்ப்பு குரல்.. சூடுபிடித்த முக்கிய விவாதங்கள் இவைதான்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு ஆறு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22ம் தேதி தண்ணீர் தினம், மே 1ம் தேதி தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களில் நடந்தப்படும். இந்த கூட்டங்களில் ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

அந்த வகையில் இன்று காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்திற்கு எதிராக 9-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வி.புத்தூர் கிராமத்தில்  நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது மூன்றரை ஆண்டு காலமாக குடிநீருக்கு போராடி வருவதாக திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சூளாங்குறிச்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டு இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படாததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.

திண்டுக்கல் மாவட்டம் வில்பட்டி மலைக்கிராமத்தில் நடைபெற்ற  கிராம சபை கூட்டத்தில் கொடைக்கானல் நகராட்சியுடன், வில்பட்டி ஊராட்சியை இணைக்க கூடாது என பொதுமக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம், சதுமுகை ஊராட்சிகளை இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கருப்பு பேட்ச் அணிந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகராட்சியை ஒட்டி உள்ள 12 கிராம பஞ்சாயத்துகளை மாநகராட்சியோடு இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இட்டேரி, தாழையூத்து உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்க: ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி!

இதேபோல் நெல்லை ராமையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாரியப்பன் என்ற கவுன்சிலர் கூட்டத்தில் உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow