திருத்தணியில் கோடி கணக்கில் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள் 

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பிரிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Dec 24, 2024 - 15:29
 0
திருத்தணியில் கோடி கணக்கில் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள் 
திருத்தணி முருகன் கோயில்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும்.  இந்த திருக்கோயிலில் தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, போன்ற மாநிலங்களில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

மலைக்கோயிலில் உற்சவர் முருகப்பெருமானை சுவாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் உண்டியலில் நகை- பணம் ஆகியவை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவற்றினை எண்ணுவதற்கு இந்து சமய அறநிலைத்துறை இடம் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் அனுமதி பெற்ற பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி, திருத்தணி முருகன் கோயில் மலை மீது அமைந்துள்ள காவடி மண்டபத்தில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.

இதில், திருக்கோயில் இணை ஆணையர் /செயல் அலுவலர் ரமணி தலைமையில் திருக்கோயில் ஊழியர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள்,  திருக்கோயில் ஒப்பந்த பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஒரு கோடியே 24 லட்சத்து  15 ஆயிரத்து 185 ரூபாயும், 402 கிராம் தங்கமும், எட்டாயிரத்து 345 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி கோயிலில் முருகனை தரிசனம் செய்யும் பக்தர்கள் மலைக்கோயில் மற்றும் சரவணப்பொய்கை திருக்குளம் பகுதிகளில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், முடி காணிக்கை செலுத்தும் குழந்தைகள் வெந்நீரில் குளிக்க சோலார் வசதியுடன் ஏற்படுத்தப்பட்ட வாட்டர் ஹீட்டர் ஒன்று முறையான பராமரிப்பின்றி பல மாதங்களாக பழுதாகி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 வாட்டர் ஹீட்டர்களை திருக்கோயில் நிர்வாகம்  கொள்முதல் செய்துள்ளது. மேலும், மின்சாரம் மற்றும் சோலார் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியாக வெந்நீரில் குளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow