முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கு ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பல்லாவரம் நகராட்சி முன்னாள் ஆணையருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்லாவரம் நகராட்சியில், கடந்த 2015 முதல் 2016 ஆண்டில் 11 நகராட்சி பள்ளிகளில் கழிப்பிடம் சுத்தம் செய்தவதற்கான ஒப்பந்தத்தை அதிக தொகைக்கு கொடுத்ததன் காரணமாக நகராட்சிக்கு 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், யானைக்கால் நோய்க்கு சிகிச்சைக்கு மருந்து கொள்முதல் செய்ததில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 487 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அன்பழகன் என்பவர் 2017ம் ஆண்டு புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், நகராட்சி முன்னாள் ஆணையர் சிவக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2023ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
புகார் அளித்து 6 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகக் கூறி, வழக்கை ரத்து செய்ய கோரி சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, திருப்திகரமான எந்த ஆதராமும் இல்லாமல், ஆணையருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய நடைமுறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல எனக் கூறி, சிவக்குமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?