தமிழ், தமிழ் என பேசுகிறார்கள்.. ஆனால் ஒன்றும் செய்யவில்லை -  ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்

தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் தமிழ், தமிழ் என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Oct 18, 2024 - 23:38
 0
தமிழ், தமிழ் என பேசுகிறார்கள்.. ஆனால் ஒன்றும் செய்யவில்லை -  ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்
தமிழ், தமிழ் என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை - ஆர்.என்.ரவி

சென்னை தொலைக்காட்சியில் நடைபெறும் ஹிந்தி மாத நிறைவு விழா நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, தமிழ்த்தாய் பாடலை தவறாக பாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வார்த்தையை பாடாமல் விட்டுவிட்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவி, “நான் இங்கு வந்த நேரத்தில் இந்தி மொழி தமிழகத்தில் கற்க மாட்டார்கள், இந்தி எதிர்ப்பு உள்ளது என நினைத்தேன். ஆனால் பல பகுதிகளுக்கு சென்ற பின் தமிழகத்தில் இந்தி மொழியை மக்கள் கற்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளேன். பள்ளி, கல்லூரி மாணவர்களை சந்தித்து பேசி வருகிறேன்.

தமிழக மக்கள் இடையே இந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் மிக பெரிய அளவில் அதிகரித்துள்ளது. தமிழ் ஆங்கிலத்தை விட மிக சிறந்த மொழி. ஆங்கிலத்தில் உள்ளதை விட அறிவியல் ரீதியாகவும், கலாச்சாரம் ரீதியாகவும் சிறந்தது என பாரதியார் 1919ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் போராட்டம் நடத்தினார். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள் தான்.

இந்தியாவில் உள்ள மொழிகளை Vernacular என ஆங்கிலேயர்கள் என கூறினார்கள். Vernacular என்றால் அடிமைகள் பேசும் மொழி. அவர்களுக்கு என மொழி இல்லை என கூறினார்கள். கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் விஷம் பரப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு சென்றாலும் ஆங்கில மொழிக்கு நாம் அடிமையாக இருந்தோம். அதனால், இந்தியாவின் மொழிகள் பெரிய அளவில் வளரவில்லை.

பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து சமஸ்கிருதம் நீக்கப்பட்டு உள்ளது.

தமிழுக்காக மத்திய அரசு பிரதமர் மட்டுமே பல நடவடிக்கைகள் எடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழத்தில் தமிழ் மொழி கற்றுக்கொடுக்கும் விதம் மிக சிறப்பாக இல்லை. மக்களை வைத்துக்கொண்டு, தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர். தமிழ், தமிழ் என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.

1947ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் 6ஆம் இடத்தில் இருந்தோம். 2011ஆம் ஆண்டு 14வது இடத்தில் இருந்தோம். தற்போது 5வது இடத்தில் உள்ளோம். இந்தியாவை யாரும் பெரிதாக நினைக்கவில்லை. தற்போது இந்தியா இல்லாமல் உலகில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow