சென்னையில் பல்வேறு இடங்களில் காலையிலேயே மழை
சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியது.
சென்னையில் கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலையிலேயே மழை கொட்டித்தீர்த்தது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மறுநாள் (புதன்கிழமை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் காலையில் முதலே மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
What's Your Reaction?