HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை... அமைச்சர் பேரவையில் விளக்கம்
HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை, இந்த வைரஸ் வீரிய தன்மை கொண்ட வைரஸ் அல்ல என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
HMPV வைரசால் எந்த பாதிப்பும் இல்லை, இந்த வைரஸ் வீரிய தன்மை கொண்ட வைரஸ் அல்ல என்று சட்டப்பேரவையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஹெச்எம்வி வைரஸ் தொற்று சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இருவருமே நலமுடன் இருக்கிறார்கள். எச்.எம்.பி.வி வைரஸ் குறித்து பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கொண்டு வந்தனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,
எச்.எம்.டி.வி வைரஸ் தற்போது சீனாவில் பரபி வடுவது என்றாலும் கூட இது 50 இந்த ஆண்டுகளுக்கு முன்பாக கண்டறியப்பட்ட வைரஸ். இணை நோய் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு நுரையீரலை பாதிக்கப்படக்கூடிய அளவிலான ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் 714 பேருக்கு பரிசோதனை செய்தலில் பலருக்கு இந்த நோய் இருந்தது கண்டறியப்பட்டது.
சுவாச நோய் தொற்றுகள் தானாகவே குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தடுப்பூசுகள் இந்த வைரஸிற்கு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இனி உலகம் முழுவதும் பல்வேறு வகையான வைரஸ்கள் வந்து கொண்டு தான் இருக்கும் என்று கூறினார்.
வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று சௌமியா சுவாமி நாதனே தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் வீரிய தன்மை கொண்ட வைரஸ் அல்ல. மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் தானாகவே குணமாகிவிடும். இதற்காக பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இந்த வைரஸ் உள்ளவர்கள் பொது இடங்களில் முக கவசங்களும் கையுறைகளையும் அழிந்து கொண்டு போவது நல்லது.
What's Your Reaction?