எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது..? என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது..? தமிழிசை 

எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது என்றும் தமிழ்நாட்டில் என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Jan 8, 2025 - 20:01
 0
எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது..? என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது..? தமிழிசை 
பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக போட்டியிடுவது குறித்து, தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் கூடியது. இதில், பாஜக மையக்குழு உறுப்பினர்கள், அண்ணாமலை, எல் முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவது, அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டது. 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, மாநில மையக்குழு கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக  தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்புகிறோம். இந்த விவகாரம் மாநில அரசின் மீது நம்பிக்கையின்மை ஏற்படுத்தி இருக்கிறது.  அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் எந்த கட்சி போராட்டம் நடத்தினாலும் அவர்களை அரசாங்கம் கைது செய்கிறது.

எல்லா கட்சிக்கும் போராட அனுமதி இருக்கிறது அவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு தொடர்ந்து கைது செய்து அடக்கு முறையை இந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.  முதலமைச்சர் கைதான நபரை ஆதரவாளர் என்று சொல்லும் அளவிற்கு நிலை உள்ளது. அண்ணாநகர் சிறுமி பாலியல் விவகாரத்தில் மாநில அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை அதனால் சிபிஐ விசாரணையை கேட்கிறோம்.

ஞானசேகரன் திராவிட முன்னேற்ற கழகத்தோடு தொடர்புடையவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று முதலமைச்சர் அவர் அனுதாபி தான் என்று சொல்லியிருக்கிறார். அந்த நபருக்கும் திமுகவிற்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்னார்கள். இன்று அனுதாபி என்று சொல்கிறார்கள். இந்த நபர் மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதால் சிபிஐ விசாரணையை கேட்கிறோம். 

எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது என்றும் ஏன் ஆர்ப்பாட்டத்தில் குரல் எழுப்புவதற்கு கூட அனுமதி மறுக்கிறீர்கள்? அப்படி என்றால் இங்கே என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது?? தமிழ்நாட்டில் அவசரநிலை போன்று குரல்களை நசுக்கப்படுகிறது ஏன்? இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக மென்மையாக செயல்படுகிறார்.

இந்த விவகாரத்தில் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும். பெண்கள் எல்லோரும் தமிழக அரசின் மீது நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் வலிமையாக பதிவு செய்கிறோம். தமிழ்நாட்டில் எந்த மாவட்டமும் பெண்களுக்கு பாதுகாப்பான மாவட்டமே இல்லை. பெண்கள் மீது அக்கறை இல்லாமல் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது.

நேற்று நடந்த திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள் ஏன் யாரையும் கைது செய்யவில்லை??  நாங்கள் போராடிய போது மட்டும் ஏன் கைது செய்தீர்கள்? நாங்கள் போராடினால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும். நீங்கள் போராடினால் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுமா?? இதில் என்ன நியாயம்.  எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் குற்றவாளி குற்றவாளி தான் என்று அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow