அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா.. வெளியான ‘ரெட்ரோ’ அப்டேட்
சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் நடிகர் அஜித் குமார் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் ‘பீட்சா’, ‘இறைவி’, ‘ஜிகர்தண்டா, ‘ஜிகர்தண்டா 2’ உள்ளிட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார். ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கியது. தொடர்ந்து, ஊட்டி, கேரளம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சரண் நடனமாடியுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ஆளுநர் கருத்தில் தடுமாற்றம் உள்ளது.. சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு குறித்த டீசர் வெளியனது. 'என் பிறப்பிற்கான நோக்கம் காதல், பரிசுத்த காதல்’ போன்ற வசனங்கள் அடங்கிய இப்படத்தின் டைட்டில் டீசரை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் வைரலாகினர். பொதுவாகவே, கார்த்திக் சுப்பராஜ் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அதிலும், தற்போது அவரது இயக்கத்தில் சூர்யா நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மே 1-ஆம் தேதி நடிகர் அஜித் குமார் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் உள்ளனர்.
What's Your Reaction?