வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் - நடனமாடி மகிழ்ந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் ராகவா லாரன்ஸ்
சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கிராமிய இசையுடன் கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில், வருமான வரி விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் இந்த ஆண்டிற்கான பொங்கல் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் வருமானவரித்துறை அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ் கலாச்சாரங்களை போற்றும் கையில் கிராமிய இசை, கரகாட்டம், காவடியாட்டம் நாட்டுப்புற பாடல்கள் பாடப்பட்டு கொண்டாடப்பட்டது. மேலும் வருமானவரித்துறை அலுவலகத்தில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருவதால் வடமாநிலத்தில் புகழ்பெற்ற நடனமான பங்காரா இசையுடன் கூடிய நடனமும் இடம்பெற்றது.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய கீர்த்தி சுரேஷ் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் எனவும் இந்தாண்டு உங்கள் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஏனென்றால் எனக்கு தல பொங்கல் என்றும் தெரிவித்தார். அதன் பின்னர் பங்காரா இசையில் நடன கலைஞர்களுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடனமாடி மகிழ்ந்தார்.
அதன் பின் மேடையின் பேசிய ராகவா லாரன்ஸ் இன்று காலை எனது மேனேஜர் என்னை தொடர்பு கொண்டு வெறி அர்ஜென்ட் இன்கம் டேக்ஸ் என்று கூறியபோது நான் பதறி விட்டேன் அதன் பின்பு அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதுதான் கூறினார் இன்று வருமானவரித்துறை அலுவலகத்தில் நடைபெறும் பெண்கள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார் என்னோட மேனேஜர் என் வாழ்க்கையில் விளையாடிவிட்டார் என நகைச்சுவையாக பேசினார் இதனால் அங்கு வந்திருந்த வருமானத்துறை அதிகாரிகள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர் மேலும் மக்களுக்கு கலைஞர்களுடன் ராகவா லாரன்ஸ் நடனமாடி மகிழ்ந்தார்
மேலும் பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் உரியடித்து விளையாடுவது வழக்கம், அதேபோல் வருமான வரித்துறை அலுவலகத்திலும் உரியடி நிகழ்ச்சி நடைபெற்றது வருமான உயர் அதிகாரிகளுடன் நடிகர் லாகவா லாரன்ஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகி இணைந்து முறியடித்தனர்.
நிகழ்வில் வருமானவரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களுக்கு குடும்பத்தினரும் கலந்துகொண்டு விளையாடி மகிழ்ந்தனர். மேலும் வட மாநிலத்தின் பிரபலமான நலமான பங்காரு இசையில் வருமானவரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு நடனமாடி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியை சேர்ந்த ராகவா லாரன்ஸ், அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் இன்று வருமானவரித்துறை அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது என்றும் அதுபோல இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு கொண்டாடப்பட உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
What's Your Reaction?