Vaazhai Review: “மாரி செல்வராஜ் நீங்க எங்கேயோ போயிட்டீங்க..” வாழை டிவிட்டர் விமர்சனம்!

Mari Selvaraj Vaazhai Movie Twitter Review in Tamil : மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாழை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் வாழ்வியலுக்கு மிக நெருக்கமாக உருவாகியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Aug 23, 2024 - 10:59
Aug 24, 2024 - 10:04
 0
Vaazhai Review: “மாரி செல்வராஜ் நீங்க எங்கேயோ போயிட்டீங்க..” வாழை டிவிட்டர் விமர்சனம்!
வாழை டிவிட்டர் விமர்சனம்

Mari Selvaraj Vaazhai Movie Twitter Review in Tamil : பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ்ஜின் அடுத்த படைப்பு வாழை. தனது வாழ்வில் நடந்த உண்மை கதையை படமாக எடுத்துள்ளதாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார். அதேபோல், தமிழ்த் திரை பிரபலங்கள் பலரும் வாழை படத்தை ரொம்பவே பாராட்டியிருந்தனர். இந்நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியான வாழை படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. 

மாரிசெல்வராஜ் இயக்கியுள்ள வாழை, இந்தாண்டின் மிகச் சிறந்த திரைப்படம் என சோஷியல் மீடியா ட்ராக்கர் ராஜசேகர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது குழந்தை பருவத்தில் நடைபெற்ற சம்பவங்களை படமாக இயக்கி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். அப்படியே கடைசியில் அனைவரையும் கண் கலங்கவும் வைத்துள்ளார். இப்படியொரு படத்தை கொடுத்ததற்காக மாரி செல்வராஜ்ஜை பாராட்டவா அல்லது அவரது துயரங்களுக்கு ஆறுதல் சொல்லவா என்பது தெரியவில்லை என விமர்சனம் செய்துள்ளார். அதோடு வாழை படத்துக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். 

13வயது நிரம்பிய இரண்டு நண்பர்களைச் சுற்றி நடக்கும் கதை தான் வாழை. இருவரில் ஒருவர் ரஜினி ரசிகர், இன்னொருவர் கமல் ரசிகர். நெருங்கிய நண்பர்களாக சுற்றித் திரியும் அவர்களின் வாழ்வியலை உண்மைக்கு மிக நெருக்கமாக திரையில் காட்டியுள்ளதாக ரசிகர்கள் டிவிட்டரில் பாராட்டி வருகின்றனர். ஹீரோவாக நடித்துள்ள சிறுவனுக்கு பள்ளிக்கூட டீச்சரான நிகிலா விமல் மீது விருப்பம். அதனை காதலாக காட்சிப்படுத்தாமல் ஒரு எல்லைக்குள்ளாக வைத்து படமாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். ஆனாலும் அதில் கொஞ்சம் நெருடல் இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

அதேபோல், தொடர்ச்சியாக வரும் பள்ளிக்கூட காட்சிகளும் கொஞ்சம் போர் அடிக்க வைக்கிறது. ஆனால், பள்ளி விடுமுறை நாட்களில் நண்பர்கள் இருவரும் வாழை தார் சுமக்கும் வேலைக்குச் செல்கின்றனர். அந்த போர்ஷன் தான் இந்தப் படத்தில் மிக முக்கியமானது. அந்த இரண்டு சிறுவர்களும், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களாக நடித்துள்ள மாரி செல்வராஜ்ஜின் சொந்த ஊர்காரர்களும் அட்டகாசமாக நடித்துள்ளனர். குறிப்பாக சிறுவர்களின் அம்மாவாக நடித்த இருவருமே செமையாக ஸ்கோர் செய்துள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். சந்தோஷ் நாராயணனின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு ஆகியவையும் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க - வாழை படத்தை பாராட்டிய தனுஷ்!

கலையரசன் ஒரு புரசிகரமான இளைஞர் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது காதல் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யப்படுத்திருக்கலாம். அதேபோல், பள்ளிக்கூட போர்ஷனில் கொஞ்சம் குறைத்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். படம் ஆரம்பம் முதலே கிளைமேக்ஸை நோக்கி தான் நகர்கிறது. அதற்கேற்றபடி இறுதிக் காட்சியில் படம் பார்த்த அனைவருமே கண் கலங்கியபடி தான் தியேட்டரில் இருந்து வெளியேறுகின்றனர். படம் முடிந்த பின்னர் வரும் பாடலும் ரசிகர்களை அப்படியே உறைய வைத்துவிட்டது என நெட்டிசன்கள் டிவிட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.  

அதேபோல், வாழை படத்துக்கு பெரும்பாலான ரசிகர்கள் 4.5 முதல் 5 ஸ்டார்கள் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளனர், வாழை படத்தை கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் எனவும், நிச்சயம் தமிழ் சினிமாவில் இப்படியொரு படம் இதுவரை வந்தது கிடையாது, இது புதிய அனுபவம் எனவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow