தமிழ்நாடு

இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்த பெண்கள் - அகல்விளக்குகளை பரிசளித்த ஜோதி அறக்கட்டளை

மண்பாண்டம் அகல் விளக்குகள் விலை ஏற்றம் என்று நினைக்காமல் வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து  வந்த பெண்கள் -  அகல்விளக்குகளை பரிசளித்த ஜோதி அறக்கட்டளை
இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்த பெண்கள்

மண்பாண்டம் அகல் விளக்குகள் விலை ஏற்றம் என்று நினைக்காமல் வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும் என்றும், எங்கள் வாழ்க்கை மக்களாகிய உங்கள் கையில் உள்ளது என கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

குமுதம் தொலைக்காட்சியில் எங்கள் வாழ்க்கை மக்களாகிய உங்கள் கையில் என்ற ஒளிபரப்பான நிலையில், அதன் எதிரொலியாக,  இன்று தஞ்சையில் தனியார் தொண்டு நிறுவனம் தலைகவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த பெண்களுக்கு 20 கார்த்திகை தீபம் அகல் விளக்குகள், திரி நூல், நல்லெண்ணெய் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.  இதில் தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் திருநங்கை சத்யா ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு  அகல் விளக்கு வழங்கினார்.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் முயற்சியாக  தஞ்சையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து மொத்தமாக கார்த்திகை தீபம் அகல் விளக்குகளை விலை கொடுத்து வாங்கி, தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வரும் ஜோதி அறக்கட்டளை தொண்டு நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. 

தஞ்சை ஆற்றுப்பாலம் சாலையில் தலை கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் வந்த பெண்களை நிறுத்தி அவர்களுக்கு சந்தனம் பன்னீர் தெளித்து பின், ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் காமராஜ் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் சத்தியா திருநங்கை அவர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக காகித பை ஒன்றை  வழங்கினார்கள்.

அந்த பையில்,  கார்த்திகை தீப அகல்விளக்குகள் 20 திரி நூல் நல்லெண்ணெய் இருந்ததை கண்டு பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி கூறுகையில் அழிவின் விளிம்பில் இருக்கும் அதன் விலைக்கு தொழிலாளிகள் நமது குமுதம் தொலைக்காட்சியில் வெளிவந்த செய்தியை பார்த்து அவர்களுக்கு உதவி செய்யும் வகையிலும் தலைக்கவசம் அணிந்து வருவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.