தமிழ்நாடு

எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது... கற்க விரும்பினால் அதை யாரும் தடுக்கக்கூடாது - சுதா சேஷய்யன்

ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது என்று மத்திய செம்மொழி தமிழாய்வு மையத்தின் துணைத்தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது...  கற்க விரும்பினால் அதை யாரும் தடுக்கக்கூடாது - சுதா சேஷய்யன்
எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது.

ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது. ஆனால், ஆர்வத்துடன் ஒருவர் கற்க விரும்பினால் அதை யாரும் தடுக்கக்கூடாது
மத்திய செம்மொழி தமிழாய்வு மையத்தின் துணைத்தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். 

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி வானவில் பண்பாட்டு மையம் பாரதி திருவிழா என்கிற 4 நாள் நிகழ்ச்சியை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெறுகிறது. 

முதல் நாளான இன்று பாரதியார் குறித்த பாடல்களை பாடி நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணை தலைவர் சுதா சேஷய்யன் ' செல்லம்மா பேசுகிறேன் ' என்கிற சிறப்பு நிகழ்ச்சியில் பாரதி மற்றும் செல்லம்மா வாழ்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை செல்லம்மா நடையில் சுதா சேஷய்யன் கதையாக பகிர்ந்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருடா வருடம் டிசம்பர் 11ஆம் தேதி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாட்டமாக பாரதி விழா பாரதி இல்லத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் இந்த முறை செல்லம்மா பாரதியாக 'செல்லமா பேசுகிறேன்' என்கிற நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பு கிடைத்தது.  

இது போன்ற நிகழ்ச்சிகளில் நமது எண்ணங்கள் பிரதிபலிக்கலாம். ஆனால் செல்லம்மா பாரதி போன்றோரின் எண்ணங்களோடு மாறுபட்டதாக எண்ணங்கள் இருக்கக்கூடாது என கூறினார்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் பாரதியார் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தியுள்ளது. இதற்கான பரிசுகள் வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி வழங்குகிறது.. பாரதியாரின் பிறந்தநாள் பாரதிய பாஷா தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

செம்மொழி மத்திய நிறுவனம் மூலமாக திருக்குறள் இந்திய மொழிகளைக் கடந்து 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் உட்பட தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரத்தை மலையாளத்திலும் மொழிபெயர்த்துள்ளோம். அனைத்து செவ்விலக்கியங்களையும் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது..

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு இதுவரை மத்திய அரசு தரும் நீதியில் பற்றார்குறை இருந்ததில்லை. பிற மொழிக்கு அதிகம் செலவிடுவது தமிழ் மொழிக்கு குறைவாக செலவிடுவது போன்ற புகார்களும் இல்லை. 

ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது.. ஆனால், ஆர்வத்துடன் ஒருவர் கற்க விரும்பினால் அதை யாரும் தடுக்கக்கூடாது.  தமிழர் அல்லாதவர்களுக்கு தமிழை ஆன்லைன் மூலமாக கற்றுக்கொடுக்க செம்மொழி மத்திய நிறுவனம் முயற்சி செய்து வருகிறது என்றார்..