போதைப்பொருள் வழக்கு.. மன்சூர் அலிகான் மகனிற்கு ஜாமின் வழங்கி நீதிமன்ற உத்தரவு

போதைப்பொருள் தொடர்பான வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கிற்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Jan 7, 2025 - 14:51
 0
போதைப்பொருள் வழக்கு.. மன்சூர் அலிகான் மகனிற்கு ஜாமின் வழங்கி நீதிமன்ற உத்தரவு
மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கிற்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது

முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம், போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இவர்களை விசாரித்ததில் ஆந்திரத்திலிருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைன் போன்ற போதைப் பொருளை தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 

தொடர்ந்து இந்த போதைப்பொருள் விற்பனையில் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தையடுத்து, ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் அவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி கைது செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை அம்பத்தூர் நீதிமன்றம், அலிகான் துக்ளக்கின் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

மேலும் படிக்க: துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசு பிரதிநிதி நீக்கம்..? யுஜிசி புதிய விதிமுறை

இதையடுத்து அலிகான் துக்ளக்., ஜாமின் வழங்க கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  அந்த மனுவில், தன்னிடம் போதைப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் தான் கைது செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார். மேலும், தனக்கு ஜாமின் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக கூறி ஜாமின் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்தார்.  

இந்த மனுவை விசாரித்த சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் வழங்க கோரி அலிகான் துக்ளக் மீண்டும் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில், அலிகான் துக்ளக்கிடம் இருந்து எந்த போதை பொருளும் பறிமுதல் செய்யவில்லை என்றும், மற்ற குற்றவாளிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அலிகான் துக்ளக்கிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, தினமும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow