பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!
மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.
சென்னை: சுதந்திர தின நாள் விடுமுறையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 18 மற்றும் 25ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06012) மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கமாக, ஆகஸ்ட் 19 மற்றும் 26ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06011) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக இந்த ரயில் இயக்கப்படும்.
இதேபோல் ஆகஸ்ட் 13 மற்றும் 18ம் தேதிகளில் நெல்லையில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்படும் ரயில் (06020) மறுநாள் காலை 11 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 14 மற்றும் 19ம் தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06019) மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
மேலும் மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.
இந்த ரயில் மாண்டியா, கெங்கேரி, கே.எஸ்.ஆர் பெங்களூரு, பெங்களூரு கண்டோண்ட்மெண்ட், பங்காருபேட்டை, குப்பம், சேலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இரண்டு ஏசி டயர் பெட்டிகள் 3 ஏசி டயர் பெட்டிகள் ஆறு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஆறு பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இருக்கும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 11) இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது.
முன்னதாக, வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழாவை முன்னிட்டு பாந்த்ரா டெர்மினஸ் மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என மேற்கு ரயில்வே அறிவித்து இருந்தது. பாந்த்ராவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 27ம் தேதியும், வேளாங்கண்ணியில் இருந்து பாந்த்ராவுக்கு ஆகஸ்ட் 29ம் தேதியும் மற்றும் செப்டம்பர் 9ம் தேதியும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
What's Your Reaction?