அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்... தேரோட்டத்திற்கு தயாராகும் மகாரதம்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாரதத்தின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு தேருக்கு வர்ணம் பூசம் பணி தீவிரமடைந்துள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரிய தேரின் ஐந்து அடுக்கு மேற்கூண்டுகள் புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்றது. தொடர்ந்து வரும் 8- தேதி தேர் வெள்ளோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் ஏழாம் நாள் பஞ்சமூர்த்திகள் என்று அழைக்கப்படும் அபிதாகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர், பராசக்தி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகள் தனித்தனி தேரில் எழுந்தருளி மாத வீதியில் வலம் வருவது வழக்கம். இந்தாண்டு திருகார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் டிசம்பர் 4-ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 10-ஆம் தேதி ஏழாம் நாள் மகாரதம் தேரோட்டம் நடைபெறும்.
மகாரதம் என்று அழைக்கப்படும் பெரிய தேரின் ஐந்து அடுக்கு மேற்கூறுகளில் ஏராளமான கட்டைகள் மற்றும் சட்டங்கள் பழுதடைந்து ஆடிக்கொண்டிருந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அறநிலையத்துறை ஸ்தபதிகள் மேற்கூண்டுகளின் பழுதடைந்த கட்டைகளை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதன்படி உபைதார்கள் மூலமாக ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அறநிலைத்துறையின் அங்கீகாரம் பெற்ற ஸ்தபதி கொண்டு ஐந்து அடுக்கு மேற்கூண்டுகள் பழுதடைந்த கட்டைகள் மற்றும் சட்டங்களை மாற்றி புதுப்பிக்கும் பணி கடந்த இரண்டு மாதங்கள் மேலாக நடந்தது பணிகள் முடிவு பெற்றது. தொடர்ந்து தேரின் சிற்பங்கள் பழுதுகள் சரிபார்ப்பு, தேரை சுத்தப்படுத்தும் பணிகள், மற்றும் வர்ணம் பூசும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் தேரின் ஐந்து அடுக்கு மேற்கொண்டுகள் பொருத்தப்பட்ட பின்பு அவற்றின் உறுதி தன்மையை அறிய கோயில் நிர்வாகம் வரும் 8-தேதி காலை மாடவீதியில் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?