ஸ்தம்பித்தது சென்னை விமான நிலையம்... 8 விமான சேவைகள் ரத்து..

Chennai Airport News: சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை திடீரென முடங்கியதால், சென்னையில் இருந்து புறப்படும் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Jul 19, 2024 - 22:12
Jul 20, 2024 - 15:52
 0
ஸ்தம்பித்தது சென்னை விமான நிலையம்... 8 விமான சேவைகள் ரத்து..
சென்னை விமான நிலையத்தில் புறப்படும் 8 விமானங்கள் ரத்து

Chennai Airport News : சென்னை விமான நிலையத்தின் இணையதள சேவை இன்று பகல் 12 மணியில் இருந்து திடீரென முடங்கியது. இணையதளம் சரியாக வேலை செய்யாமல், மிகவும் தாமதமாக செயல்பட்டதால், விமான பயன்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதை அடுத்து விமான நிறுவனங்கள், கவுண்டர்களில் கூடுதல் ஊழியர்களை  நியமித்து, போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர். 

ஒவ்வொரு பயணிக்கும் போர்டிங் பாஸ் கொடுப்பதற்கு தாமதம் ஆகியதால், பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள், சென்னையில் இருந்து சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் அதுவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

ஆனால் விமானங்கள் திடீர் தாமதங்களுக்கு என்ன காரணம்? எப்போது நிலைமை சீராகும் என்று பயணிகளுக்கு, விமான நிறுவனங்கள் முறையான அறிவிப்புகள் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த இணையதள தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யும் பணிகளில் பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஓரிரு மணி நேரங்களில், இணையதள கோளாறு முழுமையாக சீரமைக்கப்பட்டு விமானங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாமல் இருப்பதால் ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் பயணிகளுக்கும், ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தின் பயணிகளுக்கும் போர்டிங் பாஸ்களை கையில் எழுதி கொடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது 

இண்டிகோவில் அதிக அளவு விமானங்கள் இருப்பதால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் போர்டிங் பாஸ்களை கையில் எழுதிக் கொடுத்து வருகின்றனர்.

மேலும், இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களான டெல்லி ஹைதராபாத் மும்பை மதுரை உள்ளிட்ட 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்னும் தொழில்நுட்ப கோளாறு சீரடையவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்தனர். மேலும், தொழில்நுட்ப கோளாறு மாலைக்குள் சரி செய்யப்படவில்லை என்றால் வெளிநாடுகள் செல்லும் விமானங்களும் ரத்து செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow