குடியரசு தினத்தில் கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்... ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவிப்பு..!

குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம மக்களும் பங்கேற்கும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Jan 8, 2025 - 17:03
 0

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, ஊரக வளர்ச்சி இயக்குனர் பா.பொன்னையா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில், 

குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, ஜன.26 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடத்த வேண்டும். 

குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க ஏதுவாக கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவற்றை தெரியப்படுத்த வேண்டும். 

கிராம சபைக்கூட்டம் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது. கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்திடும்  வகையில் கூட்ட நிகழ்வுகளை ‘நம்ம கிராமசபை’ என்கிற கணினி/தொலைபேசி மென்பொருள் செயலி மூலம் உள்ளீடு செய்ய வேண்டும்.

மேலும், கிராம சபைக்கூட்டம் நடத்தியதற்கான அறிக்கையை 26ம் தேதியே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow