ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம்!

கடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Jan 8, 2025 - 18:02
Jan 8, 2025 - 18:05
 0
ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தல்..  3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம்!
3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம்.. மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

கடந்த ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலின் போது, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத 3 சுயேட்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அங்கரீக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்  மாவட்ட தேர்தல் அதிகாரி  ராஜகோபால் சுன்கரா ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் திமுக , அதிமுக , காங்கிரஸ். பாஜக , ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேறனர்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தின் போது, வாக்காளர்களிடையே சாதி , மத ரீதியாக தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்ய கூடாது எனவும் கூட்டம் , ஊர்வலம் நடத்த முன் அனுமதி தேவை எனவும்  வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி பயன்படுத்தக்கூடாது, சிறுவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த கூடாது என்பன உள்பட பல்வேறு விதிமுறைகளை தெரிவித்தனர்.

மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணமும் , 10  ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு அதிகமான பொருட்களை கொண்டு செல்லக்கூடாது எனவும் , அதற்கு அதிகமாக  கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது என்றும் வேட்பாளர்கள் ஏற்கெனவே எம்எல்ஏ, எம்பியாக  இருந்தால், பாக்கிதொகைகள் எதுவும் கட்ட தேவையில்லை என்பதற்கான சான்றிதழை வேட்பு மனுவுடன் வழங்க வேண்டும் என்றார்.

10 ம் தேதி துவங்கும் வேட்புமனு தாக்கலின்  போது மூன்று வாகனங்களும்,வேட்பாளர் உடன் நான்கு பேர் மட்டுமே வர அனுமதி என்ற மாவட்ட தேர்தல் அதிகாரி , கடந்த இடைத்தேர்தலில் மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெளிவந்தவுடன் 30 நாட்களில் வரவு செலவு குறித்து தாக்கல் செய்யாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் தேர்தல்நடத்தை விதிமுறைகள் என்பது கிழக்குத்தொகுதிக்கு மட்டுமே என்றும் மாவட்ட முழுமைக்கும் கிடையாது என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow