Skin Care Tips : இளமையான தோற்றம்... இதை மட்டும் செய்தால் பியூட்டி குயின் நீங்கதான்!

Skin Care Tips in Tamil : முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் காரணமாக நீங்கள் முதுமையான தோற்றம் பெருவீர்கள். இதனை எப்படித் தடுப்பது என்பது குறித்து கீழே பார்க்கலாம்!

Sep 30, 2024 - 14:18
Sep 30, 2024 - 20:41
 0
Skin Care Tips : இளமையான தோற்றம்... இதை மட்டும் செய்தால் பியூட்டி குயின் நீங்கதான்!
இளமையான தோற்றம்... இதை மட்டும் செய்தால் பியூட்டி குயின் நீங்கதான்

Skin Care Tips in Tamil : எவ்வளவு வயது ஆனாலும் இளமையாகவே இருக்க வேண்டும் என்றுதான் அனைவரது விருப்பமாகவும் இருக்கும். இளமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால்மட்டும் பத்தாது. அதற்காக சில மெனக்கெடல்களை செய்வது அவசியம். உங்களுக்கென்று ஒரு சரியான ஸ்கின் கேர் ரூட்டினை தெரிந்துவைத்துக்கொள்வது சிறந்தது. 

பொதுவாகவே 25 வயது முதல் நமது சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். அதில் முக்கியமான ஒன்று முகச்சுருக்கம். முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் காரணமாக நீங்கள் முதுமையான தோற்றம் பெருவீர்கள். இதனை எப்படித் தடுப்பது என்பது குறித்து கீழே பார்க்கலாம்!

சன்ஸ்கிரீன்: 

ஆரோக்கியமான சருமத்தை எப்போதும் பராமரிக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். சன்ஸ்கிரீன் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமின்றி, சுருக்கங்கள் வராமல் தடுக்கவும், சரும பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே, வெளியே செல்லும் போது மறக்காமல் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

மசாஜ்: 

முகம் பளபளப்பாகவும் எலாஸ்டிக் தண்மையுடனும் இருக்க தினமும் முகத்தை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது அவசியமானது. இதனால் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, சரும செல்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது . இது நல்ல தோல் நிறத்தைப் பெறவும், சுருக்கங்களை நீக்கவும், சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

தண்ணீர்: 

ஒரு நாளைக்கு குறைந்தது 4 லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியமானது. ஏனெனில் தண்ணிர் உங்களது உடலையும் சருமத்தையும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இது முகச்சுருக்கங்களை நீக்கி இளமையான தோற்றம் பெற உதவும். 

சரியான உணவு: 

அதிக காரமான, புளிப்பு, காரம் மற்றும் இனிப்பு உணவுகளை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும் உணவுகளை முடிந்தவரை தவிர்க்கலாம். புரதம் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது தோல் தசைகளை வலுப்படுத்த உதவும். இது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்க உதவும். அதேபோல இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.

இயற்கையான பொருட்கள்: 

முடிந்தவரை உங்களது சருமத்திற்கு இயற்கையான பொருட்களையே உபயோகப்படுத்துங்கள். கெமிக்கல் நிறைந்த காஸ்மெடிக் பொருட்கள் அப்போதைக்கு உங்களது சருமத்திற்கு பலன் கொடுத்தாலும் நாளடைவில் தீங்கு விளைவிக்கும். எனவே இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்துங்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow