புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து உள்ளீர்களா? - உங்களுக்கு ஓர் நற்செய்தி

Tamil Nagu Govt New Ration Smart Card Issue : 2024 நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான ஆய்வு பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

Jul 24, 2024 - 18:44
Jul 24, 2024 - 20:42
 0
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து உள்ளீர்களா? - உங்களுக்கு ஓர் நற்செய்தி
புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான ஆய்வு பணிகள் தொடக்கம்

Tamil Nagu Govt New Ration Smart Card Issue : குடும்ப அட்டைகள் மூலம் சலுகை விலையில் தமிழக மக்களுக்கு தேவையான அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை, பருப்புகள், பாமாயில் ஆகியவை விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே திமுக ஆட்சி வந்தவுடன் புதிய 'ஸ்மார்ட் கார்டு'கள் வழங்கும் முறையில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தமிழக முதலமைச்சரின் உத்தரவுபடி விண்ணப்பித்த 30 நாட்களில் புதிய 'ஸ்மார்ட் கார்டு'கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதே வேளையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனால் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமானது.

புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்காததால், மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களில் பயனடைய முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். இதனால், விரைவில் புதிய ரேஷன் கார்டுகளை உடனடியாக வழங்க வேண்டும், எனவும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

2021-ம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சமாக இருந்தது. அதன்பின் 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்து 2 கோடியே 20 லட்சம் ஆனது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் உள்ளன. தற்போது சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் புதிய ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

புதிய கார்டுகள் வழங்கும் சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியது. இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஆய்வு பணிகளும் தற்போது தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல், புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow