PAK vs BAN Match Viral Memes : பாக். அணிக்கு கண்ணீர் அஞ்சலி... போஸ்டர் ஒட்டாத குறையாக கலாய்க்கும் ரசிகர்கள்..

Pakistan vs Bangladesh 1st Test Match Viral Memes : வங்கதேசம் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இணையவாசிகள் பங்கம் செய்து வருகிறார்கள்.

Aug 26, 2024 - 07:16
Aug 26, 2024 - 17:11
 0
PAK vs BAN Match Viral Memes : பாக். அணிக்கு கண்ணீர் அஞ்சலி... போஸ்டர் ஒட்டாத குறையாக கலாய்க்கும் ரசிகர்கள்..
பாகிஸ்தான் அணியை கலாய்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள்

Pakistan vs Bangladesh 1st Test Match Viral Memes : பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி, ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

போங்கடா, எங்களிடம் தலை சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள், இந்த ஸ்கோரை முதலில் தாண்டுங்கள் பார்ப்போம் என்பதுபோல் இருந்தது பாகிஸ்தானின் முடிவு. ஏனென்றால், அப்போது மொஹமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து அவுட்டாகமால் களத்தில் இருந்தார். இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.

இதனையடுத்து, களமிறங்கிய வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 565 ரன்கள் எடுத்தது. நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூட்டிவந்து பவுலிங் போடுங்கள், நாங்கள் பிளந்து எடுப்பது நிச்சயம் என்பதுபோல் வங்கதேசம் அணியின் பேட்டிங் இருந்தது. சிறப்பாக பேட்டிங் செய்த வங்கதேச வீரர்கள் பாகிஸ்தான் பந்துவீச்சை லாவகமாக கையாண்டனர்.

மேலும் படிக்க: டிராவிட்டின் சாதனையை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்.. சச்சினின் சாதனையை முறியடிப்பாரா?..

இதில், அபாரமாக ஆடிய முஷ்பிகுர் ரஹ்மான், இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 191 ரன்கள் எடுத்து குர்ரம் ஷஷாத் பந்தில் அவுட்டானர். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் ஷத்மன் இஸ்லாம் 93 ரன்களில் வெளியேறி சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், ஷாகின் ஷா அஃப்ரிடி, குர்ரம் ஷஷாத், மொஹமது அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. டேய், நாங்கள் நாட்டில் நடந்த பெரிய கலவரத்தையே, அடக்கிவிட்டு வந்திருக்கோம், நீங்கள் எல்லாம் ஒரு ஆளே இல்லை என்பது போல், வங்கதேசத்தின் பந்துவீச்சு இருந்தது.

இதனால், பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக மொஹமது ரிஸ்வான் (51) மட்டும் அரைசதம் கடந்தார். அவருக்கு அடுத்தபடியாக அப்துல்லா ஷஃபிக் (37) ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியில் 7 வீரர்கள் இரட்டை இலக்கத்தையே தொடவில்லை. மேலும், அதில் மூன்று பேர் டக்-அவுட் ஆகி வெளியேறினர்.

இதனையடுத்து வங்கதேசம் அணிக்கு 30 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 500 ரன்னையே அசல்டா அடிச்சோம், இந்த 30 ரன்னெல்லாம் எங்களுக்கு ஜுஜூபி என்று 6.3 ஓவர்களிலேயே, விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது வங்கதேசம். இதன்மூலம், பாகிஸ்தான் மண்ணில், வங்கதேசம் தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்து சாதனை படைத்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியை கிரிக்கெட் ரசிகர்களும், இணையவாசிகளும் கலாய்த்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow