இங்கிலாந்து பவுலிங்கை துவம்சம் செய்த டிராவிஸ் ஹெட்.. வீணான ஹாட் ட்ரிக் விக்கெட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டி20 போட்டி சவுதம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்ததை அடுத்து, முதலில் களம் புகுந்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து பவுலர்களை துவம்சம் செய்த அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் 23 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிலும் குறிப்பாக 19 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதிலும் குறிப்பாக சாம் கரணின் ஒரு ஓவரில் ஹாட் டிரிக் சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 30 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக சர்வதேச டி20 போட்டிகளில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்து முதலிடத்தை பிடித்தவர்கள் பட்டியலில் டிராவிஸ் ஹெட் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக, ரிக்கி பாண்டிங் (2005), ஆரோன் பிஞ்ச் (2014), கிளென் மேக்ஸ்வெல் (2014), டான் கிறிஸ்டியன் (2021, மிட்செல் மார்ஷ் (2024) ஆகியோர் ஒரு ஓவரில் 30 ரன்கள் எடுத்துள்ளனர்.
மாத்யூ ஷார்ட் 41 ரன்களும், ஜோஷ் இங்க்லிஷ் 37 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் 10 ஓவர்களில் 118 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே ஆஸ்திரேலியா இழந்திருந்தது. இதனால், ஆஸ்திரேலியா இமாலய ஸ்கோர் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பின்வரிசை வீரர்கள் யாரும் நிலைத்து நிற்காததால் பெரியளவில் ரன்கள் குவிக்க இயலவில்லை. 172 ரன்களில் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் லியல் லிவிங்ஸ்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 151 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகப்பட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 37 ரன்களும், சாம் கரண் 18 ரன்களும், பில் சால்ட் 20 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
What's Your Reaction?