கிறிஸ்துமஸ் விழா: சாந்தோம் தேவாலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. குறிப்பாக சென்னை உள்ள புகழ்பெற்ற சாந்தோம் பேராலயத்தில் நேற்று நள்ளிரவில் இருந்தே பேராயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
கிறிஸ்துவ பாதிரியார்கள் வேதவாசகங்களை வாசிக்க, பொதுமக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை வழிபட்டனர். இந்த பிரார்த்தனையானது நேற்று இரவு 11.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணி வரை நடைபெற்றது. கிறிஸ்துவின் வரலாறு குறித்த இந்த சிறப்பு பிரார்த்தனையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சந்தோம் மட்டுமல்லாது பெசன்ட் நகர் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள 365 தேவாலயங்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மாட்டுத் தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சந்தோம் தேவாலத்தில் 30 அடி கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இயேசு பிறந்த தத்ரூபக் காட்சியை மணல் மற்றும் பயோ பிளாஸ்டிக் மூலம் 17 அடி சிற்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய வந்த மக்கள் இதனை பார்த்து மகிழ்ந்தனர்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த பேராயர் அந்தோணி சாமி பேசியதாவது, மக்கள் அனைவரும் சகோதர உணர்வேடு பழக வேண்டும். அனைவரும் ஒன்றினைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்கு இன்று சிறப்பு பிராத்தனை செய்தோம். நாம் எல்லோரும் இயற்கை நேசிப்பதை மறுக்கிறோம். இயற்கையை நேசிக்காததால் புயல் மழை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கூறினார்.
What's Your Reaction?