போலி பட்டா விவகாரம் - மதுரை ஆட்சியர் அஜராகி விளக்கம்
மதுரை மாவட்டத்தில் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல். போலி பட்டா வழங்கிய விவகாரம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்
மதுரை மாவட்டத்தில் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல். போலி பட்டா வழங்கிய விவகாரம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்
மதுரை மாவட்டத்தில் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு மீதான விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆஜராகி விளக்கமளித்தார்.
மதுரையை சேர்ந்த சிலர் கடந்த 2012ல் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் நிலையூர் பகுதியில் இலவச வீட்டு மனை வழங்கக்கோரிய விண்ணப்பங்களுக்கு, அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து 17 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
அந்த நிலத்தில் வீடு கட்ட முயன்றபோது வழங்கப்பட்ட பட்டா போலியானது என தெரியவந்தது. இதனிடையே தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டாவில், போலி பட்டா வழங்கிய ஆட்சியரை இடமாற்றம் அல்லது பணியிடை நீக்கம் செய்ய உத்திரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, பல்வேறு கேள்விகளை எழுப்பி மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கமளித்தார்.
மேலும் படிக்க: அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்த நடிகர் நாகார்ஜுனா
இந்நிலையில் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?