இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்படும்... பிரதமர் மோடி உறுதி!

தற்போது இந்தியா வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில்லை.வாய்ப்புகளை உருவாக்குகிறது என பிரதமர் மோடி நியூயார்க்கில் உரையாற்றியுள்ளார்.

Sep 23, 2024 - 08:08
 0
இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்படும்... பிரதமர் மோடி உறுதி!
இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்படும்... பிரதமர் மோடி உறுதி!

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நேற்று (21ம் தேதி) அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். இதன்பிறகு டெலாவேரில் உள்ள கிரீன்வில்லே இல்லத்துக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கட்டித்தழுவி உற்சாகமாக வரவேற்றார். பின்னர் இருவரும் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள் 

பின்னர் வில்மிங்டனில் உள்ள டெலாவேர் நகரில் குவாட் உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு ஜோ பைடன் தலைமை தாங்கினார். மேலும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட 4 பேரும் ஒன்றாக இணைந்து புற்றுநோய் மூன்ஷாட் நிகழ்வில் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி,”கர்ப்பப்பை வாய் புற்றுநோயை குணமாக்க இந்தியா தடுப்பூசி தயாரித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கர்ப்பப்பை புற்றுநோயை குணமாக்க புதிய சிகிச்சை நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளோம். இந்த நோய்க்கான சிகிச்சைகள் குறித்து அனுபவம் மற்றும் மருத்துவர்களின் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது” எனக் கூறினார்.

இதைத்தொடர்ந்து நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “தற்போது இந்தியா வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில்லை.வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியா அமெரிக்கா இடையேயான நட்புறவு உலக நன்மைக்கானது. ஐடி தொழில் துறையில் இந்தியா கால் பதிக்கிறது. உலகின் முக்கிய பல்கலை.,கள் இந்தியா வரத் துவங்கி உள்ளன. விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்கள் அமெரிக்க சந்தைகளில் இடம்பெறும். பசுமை ஆற்றல் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

மேலும் படிக்க: திருவண்ணாமலை தீபத் திருவிழா... சிறப்பாக நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்தம்!

உலகில் உள்ள நாடுகளில் இந்தியா தான் குறைந்த அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. பாரிஸ் தட்வெப்ப கொள்கையை முதலில் இந்தியா தான் நிறைவேற்றியுள்ளது. உலக அமைதியை பாதுகாப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. விரைவில் இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்படும். 2036ல் ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இந்தியா யாரையும் பின்பற்றி செல்வது இல்லை. புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கி செல்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow