'ஹே எப்புட்றா'.. 12 ஆண்டுகளாக அரை மணி நேரம் மட்டுமே தூங்கும் நபர்.. ஏன் தெரியுமா?

வியட்நாமை சேர்ந்த 80 வயதான தாய் நாகோக் என்பவர் கடந்த 60 ஆண்டுகளில் ஒரு நிமிடம் கூட தூங்கியது இல்லையாம். கடந்த 1962ம் ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவருக்கு அதன்பிறகு தூக்கம் என்பதே முற்றிலுமாக பறந்துபோய் விட்டதாம்.

Sep 3, 2024 - 20:25
Sep 4, 2024 - 15:40
 0
'ஹே எப்புட்றா'.. 12 ஆண்டுகளாக  அரை மணி நேரம் மட்டுமே தூங்கும் நபர்.. ஏன் தெரியுமா?
Daisuke Hori

டோக்கியோ: ஒரு மனிதனுக்கு நோய்கள் உண்டாக முதன்மை காரணம் தூக்கமின்மைதான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தூக்கமின்மையால் தலைவலி, உடல்சோர்வு, மனச் சோர்வு, செயல்பாடுகளில் மந்தம் என பல்வேறு பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகவே தினமும் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் ''தூக்கமின்மையால் பிரச்சனை ஏற்படும் என்று யார் சொன்னது? நான் தினமும் 30 நிமிடங்கள்தான் தூங்குகிறேன்'' என்று தனது ஆரோக்கியமான கட்டுடலை காட்டுகிறார் ஜப்பானை சேர்ந்த ஒருவர். அதாவது ஜப்பானை சேர்ந்த 40 வயதுடைய டைசுக் கோரி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேற்கு ஜப்பானின் ஹைரோகோ பகுதியில் வசிக்கும் டைசுக் கோரி, ''தினமும் 30 நிமிடங்கள் தூங்குவதற்கு எனது உடலையும், மூளையையும் பழக்கப்படுத்திக் கொண்டேன். இதன்மூலம் நான் முன்பை விட மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். எனது உடலும் கட்டுக்கோப்பாக உள்ளது. நீண்ட மணி நேரம் தூங்கினால்  மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் மருத்துவர்கள், தீயணைப்பு படை வீரர்கள் உள்பட 24 மணி நேர சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த மணி நேரமே தூங்குகின்றனர். அவர்கள் மற்றவர்களை விட சுறுசுறுப்பாக இருக்கின்றனர்'' என்று உதாரணத்தை பட்டியலிடுகிறார்.

ஆனாலும் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கினால் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்? டைசுக் கோரி பொய் சொல்கிறார்? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். இதனால் ஜப்பானின் யோமியூரி டி.வி நிறுவனம் 'Will You Go With Me?' என்ற தலைப்பில் டைசுக் கோரியை 3 நாள் முழுமையாக கண்காணித்து ஒரு ஷோவே நடத்தி விட்டது. 

அப்போது இந்த 3 நாட்களும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கிய டைசுக் கோரி, நீண்ட நேரம் தூங்கியதுபோல் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார். இந்த 3 நாட்களும் உணவு சாப்பிடுவது, தனது வேலையை சுறுசுறுப்பாக செய்துவது, ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது என துறுதுறுவென வலம் வந்தார். Japan Short Sleepers Training Association என்ற அமைப்பை கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய டைசுக் கோரி, குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது எப்படி? என்பது குறித்து 2,100 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறாராம்.

வியட்நாமை சேர்ந்த 80 வயதான தாய் நாகோக் என்பவர் கடந்த 60 ஆண்டுகளில் ஒரு நிமிடம் கூட தூங்கியது இல்லையாம். கடந்த 1962ம் ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவருக்கு அதன்பிறகு தூக்கம் என்பதே முற்றிலுமாக பறந்துபோய் விட்டதாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow