தங்கைக்கு விலைபேசிய காதலியின் அண்ணன்.. இன்ஸ்டாவில் மலர்ந்து சிறையில் முடிந்த காதல்

ராணிப்பேட்டை அருகே தங்கையின் செல்போன் எண்ணை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த காதலியின் அண்ணனை வெட்டச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Oct 22, 2024 - 16:53
Oct 22, 2024 - 17:00
 0
தங்கைக்கு விலைபேசிய காதலியின் அண்ணன்.. இன்ஸ்டாவில் மலர்ந்து சிறையில் முடிந்த காதல்
காதலியின் அண்ணனை வெட்டச்சென்ற காதலன் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அணைகட்டு ரோடு  ராதாகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் இவரது மகன் மணிவண்ணன். இவர் மாந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது தங்கை கல்பனாவுக்கும் (24) ஆற்காடு பழைய மாங்காடு பகுதியை சேர்ந்த வேலு மகன் பரத் (29) என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து, இருவரும் பல்வேறு பகுதிகளில் வலம் வந்துள்ளனர். மேலும், இருவரும் குறுந்தகவல்கள் மூலமாக புகைப்படத்தை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து கல்பனாவின் அண்ணன் மணிவண்ணன் தங்கையை கண்டித்ததோடு, கடந்த மாதம் காதலன் பரத் மீது, வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் பரத்தை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். இதில் கடுப்பான காதலன் பரத் ஏற்கனவே கல்பனாவுடன் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், முகநூல் (பேஸ்புக்) போன்றவற்றில் வெளியிட்டுள்ளார்.

மேலும், கல்பனாவின் நடவடிக்கைகளை அநாகரீகமாக சித்தரித்து, ‘அவர் அப்படிதான்.. பயன்படுத்திக் கொள்ளவும்’ என்று விலையுடன் தொலைபேசியுடன் இணைத்து பொதுவெளியில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்ட கல்பனாவின் அண்ணன் மணிவண்ணன் இது தொடர்பாக மாவட்ட இணைய வழி குற்றப்பிரிவு (சைபர் க்ரைம்) மூலம் தக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது போலிசார் விசாரணை மேற்கொண்டதில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டேன் என எழுதி கொடுத்ததின் அடிப்படையிள் போலீசார் கண்டித்து பரத்தை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் கடுப்பான கல்பனாவின் அண்ணன் மணிவண்ணன், பரத்தின் தங்கை மற்றும் அவரது அண்ணன் மனைவி ஆகிய இருவரையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பரத் செய்ததை போலவே, விலையுடன் போன் நம்பரை பகிர்ந்து ’பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டு பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட பரத் தனது இருசக்கர வாகனத்தில் மது போதையில் மூன்று அடி நீலம் கொண்ட கத்தியுடன் பட்டப் பகலில் ராணிப்பேட்டை மண்டித் தெருவில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் [VAO] அலுவலத்தில் புகுந்து மணிவண்ணனை அடித்து அலுவலக கண்ணாடிகளை கத்தியால் உடைத்து வெட்ட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அங்கிருந்தவர்கள் தடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததால் பரத் அங்கிருந்து தப்பி ஓடினார். போதை தெளிந்த பரத், ஆற்காடு காவல் நிலையத்தில் சரணடைந்து மேற்கொண்ட சம்பவத்தை செய்துள்ளதாக தெரிவித்ததின் பேரில் பரத்தை கைது செய்த காவல் துறையினர், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow